பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/242

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

224 பூர்ணசந்திரோதயம்-1 இந்த ஊரைவிட்டு நாகப்பட்டணம் ரஸ்தாவில் இரண்டொரு மைல் தூரம் நடந்துபோக வேண்டியவள் என்று பாங்கியின் செட்டியார் சொன்னார். அங்கே நீலலோசனி அம்மாளுடைய பங்களாவைத் தவிர வேறே வீடு இல்லை. ஆகையால், நீ அந்த அம்மாளுக்குச் சொந்தமானவள் போல இருக்கிறது. அந்த அம்மாளுக்கும் எனக்கும் நெடுங்காலப் பரிச்சயம் உண்டு. நான் இருக்கும் மடத்துக்கும் அதே சாலையின் வழியாகத்தான் போக வேண்டும். ஆகையால், நான் உனக்கு வழித்துணையாக வந்து உன்னை ஜாக்கிரதையாக உங்களுடைய ஜாகையில் கொண்டு போய் விடுகிறேன். நான் வந்த காரியமெல்லாம் முடிந்து விட்டது. இனி நான் திரும்பி மடத்துக்குப் போக வேண்டியவனாக இருக்கிறேன்; நேராக நீ அங்கேதானே போகிறாய்?' என்றார். அவரது சொற்களைக் கேட்ட ஷண்முக வடிவு உடனே மறுமொழி சொல்லாமல் தயங்கி மெளனமாக நின்றாள். அவள் உலகத்தின் வஞ்சகத்தையும், சூதையும் கபடத்தையும் சிறிதும் அறியாத பரிசுத்த ஸ்வரூபிணியாக இருந்தாலும், அதற்குமுன் பழக்கமில்லாத ஒரு பண்டாரத்தைத் துணையாக அழைத்துக் கொண்டுதான்போவது சரியல்லவென்ற எண்ணம் தோன்றியது. ஆகையால், அவள் கீழே குனிந்தவளாய், 'எனக்கு இன்னம் சில இடங்களுக்குப் போகவேண்டிய அலுவல் இருக்கிறது. அதையெல்லாம் பார்த்துக் கொண்டு நான் ஜாக்கிரதையாகப் போய்ச் சேருகிறேன். சுவாமியாருக்குத் தொந்தரவு கொடுக்கக் கூடாது. தாங்கள் முன்னால் போகலாம். எனக்காக iணில் காத்திருக்க வேண்டாம் ' என்று கூறியவண்ணம் நடந்து, இரண்டொரு வீடுகளிற்கு அப்பாலிருந்த இன்னொரு ஜவுளிக் கடைக்குள் நுழைந்து விட்டாள். அவ்வாறு நுழைந்தவள் அந்தக் கடையில் வாங்கவேண்டிய சில உடைகளை வாங்கிக்கொண்டு வெளியில் வர அரை நாழிகை நேரம் ஆயிற்று; வெளியில் வந்த ஷண்முகவடிவு