பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/253

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 235 தெரிந்தால், அவர்கள் மறுபடியும் வந்து என்னை அடித்துப் போட்டுவிட்டு, உன்னைத்துக்கிக்கொண்டு போய்விடுவார்கள்; எனக் குத் துன்பம் உண்டாகும் என்று நான் பின் வாங்க வில்லை. உன்னுடைய நன்மையைக் கருதியே நான் பேசுகிறேன். அரைக்காசுக்குப் போன மானம் ஆயிரம் காசு கொடுத்தாலும் வராதென்று உலகத்தார் சொல்லுவார்கள். சொத்துக்கள் போனதைப் பற்றிக் கவலை இல்லை. திரேகத்திற்கு எவ்வித பங்கமும் ஏற்படாமல் தப்பியதே பெருத்த அதிர்ஷ்டம் என்று நீயே கொஞ்ச நேரத்துக்குமுன் சொன்னாய். ஆகையால், நாம் இருவரும் இப்போது தனியாக உன்னுடைய ஜாகைக்குப் போவது நிரம் பவும் அபாயகர மானது. என்னுடைய மடமும் வீடுகளும் இதோ பக்கத்திலேதான் இருக்கின்றன. நாம் அங்கே போய்ச் சேர, அரைக்கால் நாழிகை நேரம் கூடப் பிடிக்காது. அங்கே போனவுடன் நான் நமக்கு இன்னம் சில ஆள்களைத் துணைக்கு அழைத்துக்கொண்டு வருகிறேன். உடனே நாங்கள் அங்கே இருந்து புறப்பட்டு உன்னை உன்னுடைய ஜாகையில் பத்திரமாகக் கொண்டுபோய்ச் சேர்த்து விட்டு வருகிறோம். நீ என்னுடைய சொந்த மகளைப் போலவே இருக்கிறாய். உனக்கு நேரும் விபத்தும் அவமானமும் எனக்கு நேர்ந்தவை மாதிரியல்லவா. நான் சொல்லுகிறபடி செய். உனக்கு ஒரு கெடுதலும் உண்டாகாது. நான் திருவாரூரில் சொன்ன புத்திமதியை நீ அலட்சியம் செய்ததன் பலன் கைமேல் பலித்து விட்டது. இப்போதும், நீ உன்னுடைய யோசனைப் படியே செய்வாயானால், வீண்துன்பங்களுக்கும், மானக்கேட்டுக்கும் நீ இலக்காவது நிச்சயம். இந்தப் பாதை மகா கெட்ட பாதை: சிறுபிள்ளை பயம் அறியாது என்கிறபடி நீ பேசுகிறாய். என்னவோ நான் சொல்லக் கூடியதைச்சொல்லி விட்டேன். பிறகு உன்னுடைய இஷடம் ' என்று தேன்போல இனிமையாகவும், மிகுந்த கரிசனத்தோடும், நிரம்ப உருக்கமாகவும் பேசினார்.