பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/260

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

242 பூர்ணசந்திரோதயம்-1 இல்லாமல் சுத்த நன்மையாக இருந்தால், அது இன்பகரமாக இருக்காதோ என்னவோ, கடவுளுக்கும் இப்படிப்பட்ட திருவிளையாடல்களை எல்லாம் பார்த்து ஆனந்திப்பதில் ஒருவிதத் திருப்தி உண்டாகும் போல் இருக்கிறது. ஆகையால், இந்த உலகத்தில் திருடர்கள் எப்போதும் திருடிக்கொண்டு தான் இருப்பார்கள். விபசார நாட்டம் உள்ளவர்கள் அழகான ஸ்திரீ புருஷரிடத்தில் துராசை வைக்கத்தான் வைப் பார்கள். இந்த உலகமே ஒரு நாடக மேடை. கடவுள் பிரபஞ்ச லீலா விநோத நாடகத்தை ஆட்டி வைக்கிறார். நற்குணமுள்ள மனிதன் அவனுடைய வேஷத்தை ஒழுங்காக ஆடினால், அதைக் கண்டும் கடவுள் சந்தோஷப்படுகிறார். திருடன், குடியன், துஷ்டன், பைத்தியக்காரன், ஊமையன், நொண்டி முதலிய மற்ற எவரும் தத்தம் வேஷங்களை ஒழுங்காக ஆடினாலும் அதைக் கண்டும் நாடகத் தலைவர் சந்தோஷம் அடைகிறார். ஆகையால், நாம் இந்த உலக விஷயத்தில் கடவுளுக்குப் பிரியமானது எது, பிரியமற்றது எது என்பதை நிச்சயமாகச் சொல்லமுடியாது. மனசுக்கு மனசே சாட்சி யென்றபடி, அவனவனுக்கு எது சரியாகத் தோன்றுகிறதோ அதையே அவனவன் செய்கிறதே மனித தருமமாக இருக்கும். இந்த உலகத்தில் நாம் யாரைக் கண்டிக்கிறது, யாரைக் கொண்டாடுகிறது.இதெல்லாம் பூர்வ ஜென்ம கரும பலனேயன்றி வேறல்ல. எந்தச் சமயத்தில் நமக்கு எப்படிப்பட்ட நிலைமையோ, துக்கமோ, சுகமோ, இழிவோ ஏற்பட்டாலும் அதை நாம் சந்தோஷமாக ஏற்றுக்கொள்ளக் கடமைப்பட்டவர்கள். நாம் சுயேச்சை இல்லாமல், அம்புபோல எய்கிறவனுக்கு அடிமையாக இருக்கிறோம். கொஞ்ச நேரத்துக்கு முன் அந்தக் குடியர்கள் வந்து வழிமறித்து உன்னுடைய சொத்துக்களை யெல்லாம் பிடிங்கிக் கொண்டு போய்விட்டார்கள். கடவுள் அதைத் தடுக்காமல்தானே விட்டுவிட்டார். அதுபோல, இன்னம் கொஞ்ச நேரத்தில் முன் நேர்ந்ததைவிடப் பெருத்த அபாயம் நேருவதாக வைத்துக் கொள்வோம். அதைக் கடவுள் விலக்கினாலும்