பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/264

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

246 பூர்ணசந்திரோதயம்-1 அதைக் கண்டவுடனே ஷண்முகவடிவிற்கு ஒருவித மகிழ்ச்சியும் தைரியமும் உண்டாயின. பண்டாரம் நல்ல யோக்கியமான மனிதர் என்றும், அவர் சொன்னது எல்லாம் உண்மை என்றும் நினைத்தவளாய்த் தனது பார்வையை அந்தப் பாதையின் இரண்டு பக்கங்களிலும் செலுத்திக் கவனித்தாள். அப்போது இருள் நிறைந்திருந்தமையாலும், பாட்டையின் இரண்டு சாரிகளிலும் மரப்பத்திகள் நிறைந்திருந்தமையாலும் வீடுகள் முதலியவை காணப்படவில்லை. ஆனால், அவர்கள் அந்தப் பாதையில் சிறிது தூரம் நடந்து செல்ல, அவ்விடத்தில் ஒரு குளமும், ஒரு கட்டிடமும் காணப்பட்டன. அப்போதே ஷண்முகவடிவிற்கு உயிர் வந்தது; அவள் சிறிது உற்சாகமும் மகிழ்ச்சியும் கொண்டவளாய், “அதோ இருக்கிறதே, அதுதான் தங்களுடைய மடமோ?' என்று வினவினாள். அதைக் கேட்ட பண்டாரம், 'ஆம் அம்மா அதுதான் என்னுடைய மடம். அதுவும் பெரிய பண்ணைப் பிள்ளையைச் சேர்ந்ததுதான்; அவர் அதை என்னுடைய வசத்தில் விட்டு வைத்திருக்கிறார். அதற்குள் விக்கிரகங்கள் படங்கள் எல்லாம் இருக்கின்றன. அவைகளுக்கெல்லாம் நான் பூஜை செய்துவிட்டு எப்போதும் இவ்விடத்திலேயே இருப்பது வழக்கம்' என்றார். வுண்முகவடிவு, 'தங்களுக்கு ஆகவேண்டிய பணிவிடை களைச் செய்ய சீஷர்கள், வேலைக்காரர்கள் முதலியவர்கள் இருப்பார்களே. அவர்களும் இப்போது இந்த மடத்திலே இருக்கிறார்களா?' என்றாள். பண்டாரம், “எல்லாரும் இருக்கிறார்கள். வா, உனக்குக் காட்டுகிறேன்' என்று கூற, அதற்குள் அந்தக் கட்டிடத்தின் வாசல் வந்து சேர்ந்தது. அது ஒரு சாவடிபோலக் காணப்பட்டது; அதன்முன்பக்கத்து வாசலின் கதவு மூடிப் பூட்டப்பட்டிருந்தது. முன்னால், விசாலமான இரண்டு திண்ணைகள் இருந்தன. பண்டாரம் தமது இடுப்பில் வைத்திருந்த ஒரு திறவுகோலை எடுத்துப் பூட்டை விலக்கிக் கதவைத் திறந்து கொண்டு உள்ளே