பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/267

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 249 இல்லாமல் தான்தவித்துத் தனது நகைகளுள் சிலவற்றை அடகு வைத்துக் குடும்ப காலrேபத்தை நடத்தி அரும்பாடுபட்டுத் தனது அத்தையைச் சரியானபடி காப்பாற்ற மாட்டாமல் தவித்திருந்த சமயத்தில் புதையல் எடுத்த தனம் போலத் தனது அக்காளிடத்திலிருந்து வந்த நூறு ரூபாயும், கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போனது, அவளது மனதை அறுத்தது. ஆனாலும், பெரிய பண்ணைப்பிள்ளை, தான் அத்தைக்காகவும் தனக்காகவும் வாங்கிவந்த ஆடைகளையும் மற்ற சாமான்களையும் மிகுதிப்பணத்தையும் திருப்பி வாங்கிக் கொடுத்து விடுவார் என்ற ஒரு நிச்சயமும் துணிவும் அவளது மனதில் உண்டாகிக் கொண்டிருந்தன. அவ்வாறு அவள் இன்பத்தினாலும் துன்பத்தினாலும் மாறிமாறி சஞ்சலமுற்றுப் பலவகைப்பட்ட உணர்ச்சிகளால் மனவெழுச்சி பெற்று, அந்தக் கூடத்தில் என்னென்ன பொருட்கள் இருக்கின்றன என்று பார்த்துக் கொண்டே இருக்க, அரை நாழிகை நேரம் கழிந்தது. பண்டாரம் திரும்பி வரவில்லை; அதிசீக்கிரமாக வருவதாகச் சொல்லிவிட்டுப் போனவர் அவ்வளவு நேரமாயும் வரவில்லையே என்ற எண்ணமும் ஆவலும் தோன்ற ஆரம்பித்தன. பெரிய பண்ணைப் பிள்ளையின் ஜாகை நெடுந்துரத்தில் இருக்குமோ, அல்லது, அவர் தமது ஜாகையில் இல்லாமல் எங்கேயாவது வெளியில் போயிருப்பாரோ, அல்லது, வேறே ஏதாவது அவசரமான காரியத்தைக் கவனித்துக்கொண்டிருப்பதால், கொஞ்சநேரம் பொறுத்து வருவாரோ என்று பலவித யூகங்கள் செய்தவளாய் ஒய் வற்று சஞ்சலமுற்று, அங்குமிங்கும் உலாவிக் கொண்டிருந்தாள். ஒரு நாழிகை ஆயிற்று; அப்போதும் பண்டாரம் திரும்பி வரவில்லை; ஷண்முகவடிவின் ஆவல் அதிகரித்தது. இன்னதென்று விவரிக்க முடியாத ஒரு வேதனை மனதில் உண்டாகிக் கிள்ள ஆரம்பித்தது. அவள் வாசற் கதவிற்குப் பக்கத்தில் இருந்த ஒரு ஜன்னலண்டை போய் அதன் கதவை மெதுவாகத் திறந்து தன் பார்வையை