பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/282

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 - வது அதிகாரம் சீனத்து க் கி வி தஞ்சையில் மருங்காபுரி ஜெமீந்தார் புதன்கிழமை தினம் முழுதும் கட்டாரித்தேவனிடத்திலிருந்து தமது தினசரி டைரி வரும் வருமென்று ஆவலோடு எதிர்பார்த்திருந்தார் அல்லவா! அன்றைய தினம் மாலை ஐந்துமணி சுமாருக்கு ஜெகன்மோகன விலாசத்தில் பூர்ணசந்திரோதயம் என்னும் பெண்ணரசி விலை உயர்ந்த ஆடை ஆபரணங்களால் தன்னை வெகு ஸொகுசாக அலங்கரித்துக் கொண்டவளாய் மேன் மாடத்தில் பவழக் கொடிப் பந்தலின் கீழ் நின்று, கூண்டுகளிலிருந்த பஞ்ச வருணக்கிளி பாரசீகத்து வெள்ளைக்கிளி முதலிய தனது ஆப்த நண்பர்களை ஒவ்வொன்றாக வெளியில் எடுத்து மிகுந்த வாஞ்சையோடு அவைகளைத் தடவிக்கொடுத்து முத்தமிட்டு அவைகளோடு கொஞ்சிக் குலாவிய வண்ணம் நிற்க, அப்போது அவளது பணிமகள் அவளண்டையில் வந்துநின்று, “ஸாரட்டு வண்டி தயாராக நிற்கிறது; புறப்படலாம்" என்று கூறினாள். அதைக் கேட்ட பூர்ணசந்திரோதயம், மிகுந்த மகிழ்ச்சியும் குதுகலமும் அடைந்தவளாய், "ஓ! வண்டி தயாராகி விட்டதா? அப்படியானால் நான் இதோ வந்துவிட்டேன்' என்று கூறியவளாய்த் தனது கையிலிருந்த பஞ்சவருணக்கிளியை நோக்கி, ‘சரி; நீ இனிமேல் உன்னுடைய பங்களாவுக்குள் போக வேண்டியதுதான். ராத்திரி பகல் எப்போதும் நான் உன்னை எடுத்து என்னுடைய கையின்மேல் வைத்து உன்னோடு கொஞ்சிக்கொண்டிருந்தாலும் உனக்கு சந்தோஷமாகத்தான் இருக்கும். உனக்காக நான் எங்கேயும் வெளியில் போகாமல் இருக்கமுடியுமா? உள்ளேபோய் உட்கார்ந்து கொள். நான் வம் புலாம் சோலை வரையில் போய் விட்டு இதோ அரை நாழிகையில் வந்து விடுகிறேன்' என்று கரைகடந்த வாஞ்சையோடு கூறியவண்ணம் அந்தக் கிளியைக் கூண்டிற்குள் விடுத்து, கதவை மூடி வெளியில் தாளிட்டுக்கொண்டு,