பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/285

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

268 - பூர்ணசந்திரோதயம்-1 ராஜவீதியின் வழியாகப்போய்த் திரும்பிவரும்போது, வடக்கு ராஜவீதி மேற்கு ராஜவீதி முதலியவற்றின் வழியாகத் தனது மாளிகைக்குத் திரும்பி வருவது வழக்கம். ஆதலால், அவள் ஒவ்வொரு நாளும் அந்த ஊரின் நான்கு ராஜவீதிகளையும் ஒரு தரம் சுற்றி பவனி வருவாள். அவள் ஒரு மகா ராஜனது புதல்வி போலவும், தெய்வ லோகத்து மடந்தை போலவும் எவரிடத்திலும் இல்லாத வனப்பும் ஜ்வலிப்பும் பெற்றி ருந்தாள். ஆதலால், ஒவ்வொரு நாளும், அவள் வரும் சமயத்திற்கு முன்னாகவே ஜனங்கள் வெளியில் வந்து அவளை நன்றாகப் பார்க்க வேண்டும் என்ற ஆவலோடு நின்று அவளைக் கண்டு ஒருவர்போல எல்லோரும் தங்களது வாய் கொண்ட மட்டும் அவளைப் புகழ்ந்தவராகவே வீட்டிற்குள் நடப்பார்கள். அத்தகைய நிகரற்ற மேம்பாடும் சிறப்பும் வாய்ந்தவளாக பூர்ணசந்திரோதயம் இந்த அதிகாரத்தின் முதலில் சொல்லப்பட்டபடி புதன்கிழமை மாலை ஐந்து மணிக்குத் தனது ஸாரட்டில் அமர்ந்து வழக்கம்போல வம்புலாம் சோலையை அடைந்து ஸாரட்டை விட்டுக் கீழே இறங்கித் தனது பணிமக்களை வண்டியின் பக்கத்தில் நிற்க வைத்துவிட்டுத்தான் மாத்திரம் படித்துறைமீது நடந்து, அந்த ஆற்றின் தண்ணிர்ப் பரப்பையும் இருபக்கங்களிலும் இருந்த இயற்கை அமைப்பையும் நோக்கி ஆனந்தபரவசம் அடைந்தவளாப் நடந்து மேற்கு முகமாக நெடுந்துரம் சென்றுகொண்டிருந்தாள். எங்கு பார்த்தாலும் குதூகலமாக விளையாடும் மாதர்களும், களிவெறி கொண்டு பாடி ஆடும் பறவை முதலிய ஜீவஜெந்துக்களும், அழகிய புஷ்பங்களையும் கனிகளையும் தேனையும் நறுமணத்தையும் கொள்ளை கொள்ளையாக வெளிப்படுத்தித் தங்களுக்கு வேறு எவரும் நிகரில்லை என்ற பெரும் செருக்குற்று நிமிர்ந்து நின்ற மரஞ்செடி கொடிகளுமே மயமாக இருந்து, அவளது மனதையும் கண்களையும் குளிரச் செய்தமையால், அந்த இளந்தோகை, அத்தகைய சுகக்