பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/293

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

276 பூர்ணசந்திரோதயம்-1 சகலமான உரிமைகளும் புருஷனுக்கே சொந்தமாகி விடுகின்றன. அதன்பிறகு அந்தப் பெண்ணினிடத்தில் யாரும் வரக்கூடாதென்று சொல்லவும், அவளோடு யாரும் பேசக் கூடாதென்று சொல்லவும் புருஷனுக்குப் பூர்த்தியான அதிகாரம் இருக்கிறது. பெண்ணின் தகப்பன் தாய் முதலியோர் அந்தப் பெண்ணைப் பார்க்க வருவதெல்லாம் புருஷனுடைய சம்மதியையும், தயவையும் பொறுத்ததேயன்றி அதிகாரத்தின் மேலல்ல. தாய் தகப்பன் வந்து பார்க்கக் கூடாதென்று ஒரு புருஷன் கட்டுப்படுத்தி விடுவானாகில், அதை மீறி நடக்க அவர்களுக்கு அதிகாரம் உண்டா? இல்லவேயில்லை. அடுத்த வீட்டிலோ, எதிர்த்த வீட்டிலோ வந்திருந்து தூரத்திலிருந்தபடி பெண்னைப் பார்த்துவிட்டுப் போகிற தாய் தகப் பன்மார் உலகத்தில் இல்லையா? அது எதைக் காண்பிக்கிறது? தாய் தகப்பனார் ஒரு பெண்ணைக் கலியாணம் செய்து கொடுத்துவிட்டால், அதன்பிறகு, அவர்கள் பெண்ணைப் பார்க்கப்போவது, தங்களுடைய மனசிலுள்ள ஒரு வாஞ்சை யினாலேயே அன்றி, தங்களுக்குள்ள ஒர் அதிகாரத்தினால் அல்ல. அவர்கள் வந்து பார்ப்பது புருஷனுக்குச் சம்மதி இல்லாவிட்டால், அவர்கள் ஒன்றும் செய்ய முடியாது. அது புருஷனுடைய மன ஒற்றுமையையும் பிரியத்தையும் பொறுத்த விஷயம்' என்றாள். - அதைக் கேட்ட அந்த மனிதன், 'உலகத்தில் மாமனார் மாமியாரிடத்தில் அவ்வளவு கொடுமை பாராட்டி கருணையில்லாமல் இருக்கும் மருமகப்பிள்ளை லக்ஷத்தில் ஒருவன்தான் இருப்பான். அப்படிப்பட்ட இரக்கமற்ற கொடிய பாவியையா நீங்கள் உதாரணமாகக் கொள்ள வேண்டும். உலகத்திலுள்ள பெரும்பாலோர் செய்கிறதே சட்டமாகையால், அதையல்லவா நீங்கள் செய்ய வேண்டும். பெண்ணைக் கொடுப்பது கண்ணைக் கொடுப்பதற்குச்சமம் என்று உலகத்தார் சொல்லுவார்களே. அப்படிப்பட்டபேருதவி செய்யும் தகப்பன் தனது பெண்ணைப் பார்க்கவரக் கூடாதென்று சொல்வது