பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/301

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

284 பூர்ணசந்திரோதயம்-1 தெரிந்துகொள்ளாத மனிதரும் இருக்கிறார்களா நீயும் என்னை இன்னனென்று அறிந்துகொண்டே இப் படிப் பேசுகிறாய் என்பது நன்றாகத் தெரிகிறது. உனக்குத் தெரியாதென்றே வைத்துக் கொள்வோம். என்னை சூரக் கோட்டைப் பாளையக்காரர் என்று சொல்லுவார்கள். நான் எப்படிப்பட்ட பராக்கிரமசாலி என்பதை எங்களுடைய ஊரின் பெயரே வெளிப்படுத்தும்; மகா பலசாலிகளான எத்தனையோ பகைவரை நான் சண்டையில் ஜெயித்துப் புகழ் பெற்றவன். ஆகையால், ஒரு பெண் விஷயத்தில் ரகசியத்தில் நடத்தப்படும் இந்த சதியாலோசனைப் போரில் நான் சேருகிறவனல்ல. நான் எதிலும் நேருக்கு நேர் நின்று வெல்லுகிறவன். உன்னிடத்தில் நான் முடிவாக ஒரு விஷயம் கேட்கிறேன். அதை நீ சொல்லிவிடு. உனக்கு என்னுடைய சிநேகம் வேண்டுமா? அல்லது என்னுடைய விரோதம் வேண்டுமா? இரண்டில் ஒன்று சொல்லிவிடு' என்று கண்டிப்பாகப் பேசினார். அவரது சொல்லைக் கேட்ட பூர்ணசந்திரோதயம் மிகுந்த வியப்பும் பிரமிப்பும் அடைந்தவளாய்க் காணப்பட்டு, "ஒகோ! அப்படியா! நீர்தான் சூரக்கோட்டைப் பாளையக்காரரா? அது நீர் சொன்ன பிறகுதான் தெரிந்தது. உம்முடைய தோற்றத்தி லிருந்தாவது, உம்முடைய நடத்தையிலிருந்தாவது, உம்முடைய வார்த்தைகளிலிருந்தாவது நீர் இன்னார் என்பதையே நான் அறிந்து கொள்ளக்கூடவே இல்லை. போனது போகட்டும், நீர் சூரக்கோட்டைப்பாளையக்காரராக இருப்பதைப் பற்றியாவது, அல்லது, நீர் இந்த ஊருக்கே மகாராஜராக இருப்பதைப் பற்றியாவது எனக்குக் கொஞ்சமும் ஆட்சேபணையே இல்லை. நீர் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், நீர் எனக்குச் சிநேகிதராகவாவது, அல்லது, விரோதியாகவாவது இரண்டில் ஒன்றாக இருக்கத்தான் வேண்டுமென்பது என்ன கட்டாயமோ தெரியவில்லை! ஏன்? இரண்டும் இல்லாமல் சும்மா இருக்கமாட்டீரோ?' என்றாள்.