பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/308

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 291 டைய கண்ணில் படவில்லையென்பது நிஜந்தான். கஞ்சாவுக்குக் காலணா கிடைப்பது குதிரைக் கொம் பாகி விட்டது. ஏதோ எனக்குத் தெரிந்த தொழிலைச் செய்து வயிறு வளர்க்க வேண்டியிருக்கிறது. அதற்காக இந்த நாய்க்குட்டி சோறு கண்ட இடம் சொர்க்கம், கஞ்சி கண்ட இடம் கைலாசம் என்று எங்கெங்கேயோ அலைந்து திரிகிறது. எஜமான் ஏதேர் இந்த அடிமையை இப்போது நினைத்ததாகச் சொன்னாற் போலிருக்கிறதே? என்னால் என்ன ஜோலி ஆகவேண்டும்? சொன்னால், இதோ ஒருநொடியில் முடித்துத் தருகிறேன். இப்போது போனாளே இந்தக் குட்டியைத் தூக்கிக் கொண்டு வந்து உங்களிடத்தில் ஒப்புவிக்க வேண்டுமா? எஜமான் ஒரு வார்த்தை சொல்லுங்கள். அடுத்த நொடியில் அந்தப்பெண் எங்கே இருக்கிறாள் பாருங்கள்' என்றான். அவனது துணிகரமான சொற்களைக் கேட்ட பாளையக்காரர் மிகுந்த மகிழ்ச்சியும், துணிபும் அடைந்து அவனை நோக்கிப் புன்னகை செய்த முகத்தினராய், "நீ பேசுவதைப் பார்த்தால், இப்போது போனவள் இன்னாளென்பது உனக்கு ஏற்கெனவே தெரியும் போலிருக்கிறதே? தெரிந்திருந்தால், இவளுடைய அந்தரங்கங்களை யெல்லாம் கொஞ்சம் சொல்லப்பா இவள் எப்பேர்ப்பட்டவருக்கும் மசியாத மகா அபூர்வச் சரக்காக இருக்கிறாள். உண்மையில் இவள் யாரென்பதும், இந்த ஊரில் வந்திருந்துகொண்டு எதற்காக இப்படி வெளிவேஷம் போடுகிறாள் என்பதும் தெரியவில்லை. இவளுடைய பேச்சோ மகா எடுப்பாக இருக்கிறது. யாராக இருந்தாலும் இவள் கேவலம் ஒரு திரணமாக மதித்துப் பேசுகிறாள். உண்மையிலேயே இவளுக்கு ஏதாவது தக்க பக்கபலம் இருக்கிறதா? அல்லது, யெளவனப் பருவத்து முறுக்கினாலும் இறுமாப்பினாலும் இவள் இப்ப்டிப் பேசுகிறாளா? உண்மை ஏதாவது உனக்குத் தெரிந்திருந்தால், சொல். பஞ்சண்ணா!' என்று கூறினார்.