பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/309

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

292 பூர்ணசந்திரோதயம்-1 உடனே பஞ்சண்ணாராவ் நிரம்பவும் வியப்படைந்தவன் போல நடித்து, 'அடாடா இங்கே இருந்துபோன குட்டி யார் என்று நான் கவனித்துப் பார்க்கவில்லையே! அவள் இப்படிப்பட்ட ஆசாமி யென்பது தெரிந்திருந்தால் நான் இந்நேரம் அவளை நன்றாகப் பார்த்தும் இருப்பேன்; தங்களை மீறி அவள் போகும் படி விடாமல் தடுத்தும் இருப்பேனே அடாடா கொஞ்சத்தில் காரியம் கெட்டுப்போய் விட்டதே! இப்போதுதான் என்ன கிணற்று நீரை வெள்ளம் கொண்டு போகாது. அவள் யாரென்பதைத் தாங்கள் சொன்னால், நான் இந்த நிமிஷம் முதல் அதே வேலையாயிருந்து அவளைப் பற்றி என்னென்ன சங்கதிகள் தங்களுக்குத் தெரியவேண்டுமோ அவைகளை அறிந்துகொண்டு வந்து தங்களுக்குத் தெரிவிக்கிறேன்' என்றான். அதைக் கேட்ட பாளையக்காரர் நிரம்பவும் திருப்தியும் மகிழ்ச்சியும் அடைந்தவராய், 'இவள் தெற்கு ராஜவீதியில் ஜெகன் மோகன விலாசம் என்ற மாளிகையில் ஜாகை வைத்துக் கொண்டிருக்கிறாள். இவளுடைய பெயர் பூர்ணசந்தி ரோதயமாம். இவள் தன்னை தார்வார் தேசத்து மகாராஜாவி னுடைய அபிமான புத்திரி என்று சொல்லிக் கொள்ளுகிறாளாம். அழகில் இவளுக்கு நிகராகச் சொல்லக் கூடிய பெண்ணே இந்த ஊரில் இருக்கமாட்டாள் என்று எல்லா ஜனங்களும் அபிப்பிராயப் படுகிறார்கள். இவளுடைய முகத்தழகை ஏறிட்டு ஒரு தரம் பார்த்தால், இவளைப் படைத்த பிரம்ம தேவன் கூட மதிமயங்கி உணர்வு கலங்கி அப்படியே மோகித்து நின்று விடுவான் என்பது நிச்சயம். இவளிடத்தில் எவ்வளவு அபார மான வசீகரத்தன்மை நிறைந்திருக்கிறதோ, அதுபோல, அசாத்தியமான புத்தி நுட்பமும், வாக்கு வல்லமையும், இறுமாப்பும் பிரமாதமாக நிறைந்திருக்கின்றன. நான் இந்நேரம் நயமாகவும் பயமாகவும் எவ்வளவோ கெஞ்சி மன்றாடுகிறேன். இவள் என்னை அவ்வளவு அலட்சியமாக எடுத்தெறிந்து பேசிவிட்டாள்.அடாடா நினைக்க நினைக்க என்