பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/320

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

304 பூர்ணசந்திரோதயம்-1 இருப்பார்கள் என்று நான் நினைக்கவில்லை. அப்படி இருந்தாலும் நான் என்னுடைய தாயாரிடத்தில் வைத்திருக்கும் அபாரமான வாஞ்சையானது, என்னைத் துண்டியதாகையால், நான் இங்கே வந்தேன். அந்த ஊரிலிருந்து யார் வந்தாலும் அவர்களைப் பார்ப்பது என்னுடைய தாயாரைப் பார்ப்பதுபோல, அவ்வளவு பிரமாதமான ஆனந்தத்தை உண்டுபண்ணுகிறது. முக்கியமாக அதைக் கருதியே நான் இப்போது இங்கே வந்தது" என்று நயமாக மொழிந்தாள். அந்த வார்த்தைகளைக் கேட்ட பூர்ணசந்திரோதயம் மிகுந்த லஜ் ஜையும் கலக்கமும் சஞ்சலமும் அடைந்தவளாய் அதற்குத் தான் என்ன மறுமொழி சொல்வதென்பதை அறியாமல் சிறிது நேரம் தத்தளித்தவளாய், அந்தப் பெருமாட்டியை நோக்கி, 'அம்மணி ராஜஸ்திரீகள் என்றால், அவர்கள் லட்சனமாக இருந்தாலும், அவலட்சணமாக இருந்தாலும், அவர்களை மகாலட்சுமிக்குச் சமானமாக மதித்து மற்ற ஜனங்கள் வழிபட வேண்டுமென்று நம்முடைய பெரிய யோரும் சொல்லுவார்கள்; சாஸ்திரங்கள் சொல்லுகின்றனவாம். அப்படி இருக்க, தாங்கள் அவர்களை இறக்கியும் என்னை அபாரமாகப் புகழ்ந்தும் பேசுவதைக் கேட்பது எனக்கு நிரம்பவும் லஜ்ஜையாக இருக்கிறது. யானை கறுப்பாக இருந்தாலும் அதன் விலை ஆயிரம் பொன் என்று சொல்லுவார்கள். அதுபோல, ராஜ வம்சத்தில் பிறப்பவர்கள் அழகாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவர்களுக்கு எப்போதும் பூஜிதையுண்டு. ஒரு ராஜனைக் கலியாணம் செய்து கொள்வதற்கும் அவர்களுக்கு யோக்கியதையுண்டு. ராஜ வம்சத்தைச் சேராத சாதாரண ஜனங்களுடைய வயிற்றில் பிறந்த ஒரு பெண் கந்தருவ ஸ்திரீ போலவும் ரதிதேவி போலவும் இருந்து சகலமான மேம்பாடுகளும் உத்தம லட்சணங்களும் பெற்றிருந்தாலும் அவளுக்கு அப்படிப்பட்ட பூஜிதையும் உண்டாகாது. ஒரு மகாராஜனைக் கல்யாணம் செய்துகொள்ளத் தகுந்த யோக்கியதையும் உண்டாகாது" என்றாள்.