பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/323

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 307 மகாராணியென்று பெயர் வைத்துக்கொண்டு மற்ற சகலமான செல்வங்களையும் படைத்திருந்தும், புருஷனுடைய உண்மைக் காதலை மாத்திரம் அடையாது இருந்தால், அதைப்போல துர்ப்பாக்கியமான நிலைமை வேறொன்றும் இல்லை என்பது வாஸ்தவமான சங்கதிதான். அப்படி இருந்தாலும், ராஜ வம்சத்து ஸ்திரீகளும் எங்களைப் போன்ற சாதாரண ஸ்திரீகளுக்கும் ஒரு விஷயத்தில் வித்தியாசம் இருக்கிறது. புருஷனுடைய உண்மைக்காதல் இல்லாவிட்டாலும், சகலமான சம்பத்தும் மற்ற ஜனங்களுடைய பூஜிதையுமாவது ராஜஸ்திரீகளுக்கு அவசியம் இருக்கும். எங்களைப் போன்ற சாதாரண ஸ்திரீகளுக்குப் புருஷனுடைய உண்மைக் காதல் இல்லாவிட்டால், மற்ற எல்லாச் செல்வமும், சூன்யமாகி விடுகிறதல்லவா! முக்கியமான அந்த ஒரு விஷயத்திலாவது நீங்கள் அதிர்ஷ்டசாலிகள் தானே' என்றாள். அதைக்கேட்டபெருமாட்டிகலகலவென்று நகைத்து, "ஆம்: அது உண்டுதான். அதிருக்கட்டும்; நீங்கள் தார்வார் தேசத்து ராஜாவின் அபிமான புத்திரியென்று ஜனங்கள் சொல்லிக் கொள்ளுகிறார்களே. அப்படியானால் நீங்களும் ராஜ வம்சத்தைச் சேர்ந்தவர்கள்தானே, அப்படி இருக்க நீங்கள் உங்களை சாதாரன ஜனங்களோடு சேர்த்துப் பேசுகிறீர்களே!' என்றாள். பூர்ணசந்திரோதயம் முன்னிலும் அதிக இனிமையாகப் பேசத் தொடங்கி, 'அம்மணி நான்தார்வார் தேசத்து மகாராஜனுடைய அபிமான புத்திரியென்று நான் யாரிடத்திலும் சொன்னதே இல்லை. நான் சாதாரணமான ஒரு பெரிய மனிதருடைய குடும்பத்தைச்சேர்ந்தவளேயன்றி வேறல்ல. பொய்யான அந்தச் சங்கதியை யார் வெளியிட்டு இவ்வளவு தூரம் பரவச் செய்தார்கள் என்பது தெரியவில்லை. இதுவரையில் பலர் இந்த மாதிரியே என்னிடம் கேட்டுவிட்டார்கள். அந்தப் பிரஸ்தாபத்தைக் கேட்கும்போதே என்னுடைய உடம்பு