பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/327

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் Ga. துரைசாமி ஐயங்கள் S11 பிரமாதமாகப் பரவுவது என்றால், மற்றவர்களிடத்தில் இல்லாத ஏதோ ஒரு பெரும் சிறப்பு உங்களிடத்தில் இருப்ப தனால், அப்படி ஆயிருக்கிறது என்பது நிச்சயமாகிறது அல்லவா இப்போது நான் இங்கே வந்ததையே ஒர் உதாரணமாக எடுத்துக் கொள்வோம். நான் சாதாரணமாக இந்த ஊர் அரண்மனையிலுள்ள என்னுடைய அந்தப்புரத்தை விட்டு வெளிக்கிளம்பி எப்படிப்பட்ட பெரிய மனிதர்களுடைய ஸ்திரிகளைப் பார்ப்பதற்குக் கூடப் போனதில்லை. அப்படிப் பட்டவளான என்னையே நீங்கள் கவர்ந்து இங்கே வரும்படி செய்துவிட்டீர்களல்லவா! உங்களிடம் ஒரு விசேஷமான மேம்பாடு இருக்கிறது என்பதற்கு இதைவிட வேறே அத்தாrயும் வேண்டுமா என்றாள். அவளது வார்த்தைகளைக் கேட்ட பூர்ணசந்திரோதயம் மிகுந்த வியப்பும் கலக்கமும் பலவகையான சந்தேகங்களும் அடைந்து என்ன மறுமொழி சொல்வது என்பதை அறியாமல் சிறிதுநேரம் தயங்கி, 'அம்மணி தாங்கள் ஆரம்பத்தி லிருந்தே பேசுவதைப் பார்த்தால், தாங்கள் இந்த ஊர்மகாராஜா அவர்களால், இந்த விஷயமாக அனுப்பப்பட்டு வந்தவர்களாகத் தோன்றுகிறதேயன்றி, தார்வார் தேசத்திலுள்ளதாயாரைப் பற்றி விசாரித்துக்கொண்டு போக வந்தவர்களாகத் தோன்றவில்லை' என்று கூறிப் புன்னகை செய்தாள். அந்தப் பெருமாட்டி, 'அப்படியல்ல, நீங்கள் ராஜஸ்திரீ ஆக வேண்டுமென்று ஆசைப்படுவதை அறிந்த பிறகுதான், என் மனசில் இந்த எண்ணம் உண்டாயிற்று. உங்கள் விஷயத்தில் நான் துதாகப் போய், மகாராஜாவிடம் பேசி, உங்களுடைய விருப்பத்தைப் பூர்த்தி செய்விக்கலாம் என்ற ஆசை உண்டாயிற்று. வேறொன்றும் இல்லை என்றாள். பூர்ணசந்திரோதயம், "இந்த ஊர் பெரிய மகாராஜாவின் இடத்திலா என்னைப் பற்றி சிபாரிசு செய்யப் போகிறீர்கள்?" என்றாள்.