பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/343

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் - 327 மாகிலும் எண்ணுவாயானால், நீ என்னிடத்தில் இப்படிப்பட்ட வருமம் பாராட்டமாட்டாய் என்பது நிச்சயம்" என்றார். பசுமரத்தானிபோல மனதில் பாய்ந்த அவரது வார்த்தை களைக்கேட்ட பூர்ணசந்திரோதயம் அதற்கு மேலும் தான் மெளனமாக நிற்பது தகாது என நினைத்துத் தனது வசீகரமான சுந்தரவதனத்தை மெதுவாக உயர்த்தி நாணத்தோடு புன்னகை செய்து, 'ஒரு பெண்பிள்ளை எவ்வளவுதான் புத்திசாலித்தன மாகவும், ஜாக்கிரதையாகவும் விழிப்பாகவும் நடந்து கொண்டாலும், எவ்வளவு தான் அவள் மற்ற புருஷர்களுக்கு இடங் கொடுக்காமல் நெருப்புத்தணல் போல இருந்தாலும், எப்படியும் கடைசியில் அவள் ஒரு புருஷரிடத்தில் அகப்பட்டுத் தோல்வியடைந்து, அவருக்கு அடிமையாகி விடவேண்டியது தான் அவளுடைய கதி போல் இருக்கிறது. சர்வ சாதாரணமான மனுஷியான என்னிடத்தில் மகாராஜா இவ்வளவு அடாரமான பிரியமும் அமிதமான மதிப்பும் வைத்திருப்பதைக் காண, என் மனமே இன்னமும் நம்பிக்கை கொள்ள மாட்டேன். என்கிறது. தங்களுக்கு இந்த ஏழையினிடத்தில் இப்படிப்பட்ட அபரிமிதமான கருணா கடாrமும், இவ்வித எண்ணங்களும் இருக்கிறது என்பதை ஓர் ஆள் மூலமாகச் சொல்லி யனுப்பினால், நானே தங்களுடைய இருப்பிடத்துக்கு ஓடிவந்து தங்களுக்கு அடிமையாகி இருப்பேனே. அப்படியிருக்க, தாங்கள் இவ்வளவு தூரம் ஏன் பிரயாசை எடுத்துக்கொள்ள வேண்டும்? ஏன் இப்படி உருமாறி வரவேண்டும்? முள்ளைமுள்ளால் எடுக்க வேண்டும், திருடனைத்திருடனைக்கொண்டுபிடிக்கவேண்டும் என்று ஜனங்கள் சொல்லுவார்கள். அதுபோல, இந்தப் பெண்ணைப் பிடிப்பதற்கு பெண் வேஷம் போட்டு வந்தால் தான் காரியம் ஆகுமென்று நினைத்து இப்படிச் செய்தீர்கள் போலிருக்கிறது" என்று மிருதுவாகவும் மாதுரியமாகவும் மொழிந்தாள். - - - இளவரசர் ஆனந்தபரவசம் அடைந்தவராய்ப் புன்னகை செய்து, "நான் இந்தத் தேசத்தை ஆளும் மகாராஜனல்லவா