பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2-வது அதிகாரம் எப்போது வருவாரோ என் சாமி, கமலம் தஞ்சை நகருக்குச் சென்ற தினத்திற்குச் சில வாரங்களுக்கு முன்பு ஒரு நாளைய இரவில் சுமார் 11மணிசமயம் இருக்கலாம். தஞ்சைக்கு வடக்கில் இரண்டு மைல் தூரத்தி லுள்ள வெண்ணாற்றங்கரை என்ற ஊரில் மூன்று உப்பரிக்கை யுள்ள அழகான ஒரு மெத்தை வீட்டில் இரண்டாவது மாடத்தில் நிரம் பவும் சொகுசாக அலங்கரிக்கப்பட்டிருந்த ஒரு சயன அறையில் பெண்மணியொருத்திதனியாக உட்கார்ந்திருந்தாள். அவள் சுமார் இருபது வயதடைந்த அதிசுந்தர ரூபிணியாகக் காணப்பட்டாள். அவள் முதன்முதலாக சோபனக் கலியான அறைக்குள் விடப்பட்ட மணவாட்டிபோல விலையுயர்ந்த ஆடையாபரணங்களையும் ஜாதி, ரோஜா, மல்லிகை முதலிய நறுமலர்களையும் அணிந்து, அத்தர் பன்னீர் முதலிய பரிமள கந்தங்களைத் தன்மீதும் சயனத்தின்மீதும் தெளித்துக்கொண்டு, மையிட்டு, ஜவ்வாதுப் பொட்டிட்டு, தெய்வலோகத்திலிருந்து அப்போதே நேராக வந்து இறங்கிய ரதிதேவியோ, ரம்பை ஊர்வசி திலேத்தமையோ என, யாவரும் மயங்கித் தடுமாறும் படி, மனிதரது மனமாகிய இரும்பை ஓர் இமைப்பொழுதில் கவர்ந்து இழுத்துக்கொள்ளும் காந்தம்போல அழகும், இனிமையும் ஒன்றாகத் திரண்டு ஒருருக்கொண்டு வந்ததோ வெனும் படி அந்த மோகனாங்கி இனிது வீற்றிருந்தாள். அவள் அடிக்கடி நெடுமூச்செறிவதால் அவளது எழில் வழிந்த மார்பகம் விம்மி விம்மித் தணியும் போதெல்லாம் அவள் அணிந்திருந்த பனாரீஸ் ரவிக்கை படார் என்று இரண்டாகக் கிழிந்து போய்விடுமோவென யாவரும் அஞ்சும் படியாக இருந்தது. அந்த அறைக்கு வெளியில் உண்டான ஒர் அற்ப ஓசையையும் அவள் செவிகொடுத்துக் கவனித்துக் கொண்டிருந்ததிலிருந்து அவள் யாரோ ஒருவரது