பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 45 சேர. இனாம்தார்: - இங்கே இருப்பவர்களுள் நானும் சாமளராவுந்தான் பாலியர்கள். அவள் ஆசைப் பட்டால், எங்களிருவருள் ஒருவர்மேல்தான் ஆசைப்பட வேண்டும். ஆனால், நான் ஒருநாளும் சாமளராவுக்குத் தோற்றவனல்ல. சாமளராவ்:- எல்லாம் முடிவில் தெரிந்துபோகிறது. நாம் இப்போதே ஏன் சண்டை போட வேண்டும். இளவரசர்:- சரி; நான் சொன்னதை நீங்கள் ஐந்துபேரும் ஒப்புக் கொண்டது எனக்கு நிரம் பவும் சந்தோஷமாக இருக்கிறது. நாம் அப்படி செய்வதே முடிவான தீர்மானம் . ஆனால் நாம் இந்த விஷயத்தில் ஒருவர் மேல் ஒருவர் பகைமை கொண்டு மனஸ்தாபம் படக்கூடாது. அதுதான் முதல் விஷயம். இந்த விஷயத்தில் அவரவர்கள் தங்கள் தங்களுக்குத் தோன்றுகிறபடி தனித்தனி முயற்சி செய்ய வேண்டும். ஒருவர் செய்யும் முயற்சியை இன்னொருவர் கெடுக்கக் கூடாது. அப்படிச் செய்தால், காரியம் தாறுமாறாகப் போய்க் குழப்பம் உண்டாகிவிடும். ஆகையால், நாம் இந்த விஷயத்தில் சில நிபந்தனைகளை ஏற்படுத்திக்கொண்டு அவைகளின் படியே கட்டுப்பட்டு நடக்கவேண்டும். மற்றவர் எல்லோரும்:- சரி சரி; அதுவே சரி. இளவரசர்:- முதலாவது நிபந்தனை, நாம் இந்த மாதிரியான உடன்படிக்கை செய்து கொண்டு முயற்சிக்கிறோமென்பது எவருக்கும் தெரியாமல் ரகசியமாகவே இருக்க வேண்டும். இரண்டாவது, அவளிடத்தில் போய் ஒருவர் முயற்சிக்கும் காலத்தில் இன்னொருவர் முயற்சிக்கக் கூடாது. ஒரே காலத்தில் இரண்டு மூன்று பேர்கள் போய் மேல்விழுந்தால், அவள் சந்தேகப்படுவாள்; காரியமும் கெட்டுப்போகும். ஆகையால், ஒவ்வொருவர் ஒவ்வொரு நாள் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். கலி. மிட்டாதார்:- அதை எப்படி ஏற்படுத்திக் கொள்ள முடியும்? ----