பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 55 அந்த யெளவன புருஷர் அந்தச் சம்பவம் நிகழ்ந்தது மெய்யோ பொய்யோவென அப்போதும் சந்தேகித்தவராய், தோட்டத்தின் நடுவிலிருந்த வாசலண்டை போய், அங்கிருந்த கதவைத் திறந்து கொண்டு சோலையின் நடுவிற் சென்ற பாதையின் வழியாக நடந்து, அவளிருந்த மாளிகையின் வாசற் படிக்குப் போய்ச் சேர்ந்தார். அதுகாறும் மூடி உட்புறத்தில் தாளிடப்பட்டிருந்த கதவு உடனே திறக்கப்பட்டது. அவ்வாறு கதவைத்திறந்தவன் மிகவும் விகார ரூபத்தோடு இருந்த ஒரு கிழவன். அவன் ஒரு மகாராஜனது மெய்க்காவலன் போல மிகவும் படாடோபமான ஆடைகளையும், டாலி டவாலிகளையும் அணிந்திருந்தான். அவன் கதவைத்திறந்து வைத்துவிட்டு வெளியில் வந்து அவருக்கு உபசார வார்த்தை சொல்லி, 'இந்தக் கிளி ஓடிப் போகாமல் நல்ல வேளையாகத் தாங்கள் பிடித்துக் கொண்டீர்களே! தாங்கள் செய்தது பெருத்த உபகாரம். இந்தப் பஞ்சவர்ணக் கிளியை எங்களுடைய எஜமானியம்மாள் ஐயாயிரம் ரூபாய்க்கு வாங்கி உயிருக்குயிராக வளர்த்து வருகிறார்கள்; இது எங்கேயாவது ஒடிப் போயிருந்தால் அவர்களுக்கு உயிரே போனபடிதான்; இப்படி கொடுங்கள். நான் கொண்டுபோய் எஜமானியம்மாளிடத்தில் கொடுக்கிறேன். அவர்கள் நிரம்பவும் ஆவலோடு இருக்கிறார்கள்' என்று நயமாகக் கூறினான். ஆனால் அந்த யெளவன புருஷர் தெய்வச் செயலாகத் தமக்கு வந்து வாய்த்த அந்த மகா அதிர்ஷ் டகரமான சந்தர்ப்பத்தை அவ்வளவோடு இழந்துவிட்டுப் போகக் கூடியவரல்ல. புன்னகை செய்து தமது மனதை மலர்த்தித் தமக்கு அபயஸ்தம் கொடுத்த அந்த ஜெகன்மோகினி தேவியின் ஆலயத்திற்குள் நுழைந்து அவளிடத்தில் வரம் வாங்குவதே உறுதியெனத் தீர்மானம் செய்துகொண்ட அந்த யெளவன புருஷர் அந்த மெய்க்காவலனை நோக்கி, "அப்பா நானே நேரில் இதைக் கொண்டுபோய் உன்னுடைய எஜமானியம் மாளிடத்தில் கொடுத்துவிட்டுத் திரும்பிப் போகிறேன். இவ்வளவு தூரம்