பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 பூர்ணசந்திரோதயம்-1 பக்கத்திலிருந்த ஒரு லோபாவின் மேல் கிளியைப் பார்த்த வண்ணம் மெதுவாக உட்கார்ந்து கொண்டாள். உடனே கலியாணபுரம் மிட்டாதார் முன்னிலும் பன்மடங்கு அதிக உருக்கமாகவும் அன்பாகவும் அவளை நோக்கிப் புன்னகை செய்து, 'நான் சொன்னதில் புதுமை ஒன்று மில்லையே! என்னுடைய கருத்தை நன்றாக விளக்கிச் சொல்லட்டுமா?’ என்று நயமாகக் கூறினார். அதைக் கேட்ட பூர்ணசந்திரோதயம், "தாங்கள் சொன்னது தான் நன்றாக விளங்குகிறதே! அதை இன்னமும் அதிகமாக விளக்கும் சிரமம் தங்களுக்கு ஏன்? இந்த மனித ஜென்மத்தை இழந்து பஞ்சவர்ணக்கிளியின் ஜென்ம மெடுக்க ஆசைப்படு வதாகச் சொன்னிர்கள். அவ்வளவுதானே?' என்று குறும்பாக வும் நயமாகவும் மறுமொழி கூறியவண்ணம் எதிர்ச்சாரியி லிருந்த சத்திரத்தின் மேன்மாடத்தை நோக்கினாள். அவளோடு தாம் நெடுநேரம் சம்பாஷிக்க நேர்ந்திருப்பதைக் கண்டு உட்காருகிறவர்போல அந்த யெளவன புருஷர் சிறிது தூரத்திற்கப்பால் கிடந்த ஒரு நாற்காலியின் மேல் மெதுவாக உட்கார்ந்துகொண்டு, 'அடடா நான் அப்படியா சொன்னேன்! பொதுவாக நான் பஞ்சவர்ணக்கிளியின் ஜென்ம மெடுத்துக் கொள்ள வேண்டுமென்று சொல்லவில்லையே. உன்னுடைய பஞ்சவர்ணக் கிளியாக மாறவேண்டு மென்றல்லவா நான் சொன்னேன்' என்று கூறி, "உன்னுடைய' என்ற சொல்லை அழுத்திப் பேசினார். அதைக்கேட்ட அந்த மடமங்கை சிறிது நாணி மகிழ்ச்சியாகப் புன்னகை செய்து, 'ஒகோ அப்படியா என்னுடைய பஞச்வர்ணக் கிளியாகவா மாற விரும் புகிறீர்கள்? ஏன், தாங்களும், என்னுடைய அன்பையும் போஷணையும் பெற்றுக்கொண்டு இந்தக் கிளி செய்ததுபோல நன்றிகெட்ட தனமாக ஒடிப்போய்ப் பார்க்க வேண்டுமென்ற எண்ணமோ? எனக்கு இந்த ஒரு பஞ்சவர்ணக் கிளியே போதுமானது. இனி