பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 பூர்ணசந்திரோதயம்-2 அக்கிராசனம் வகித்து தாங்களே நடத்திவைக்கப் போகிறீர்கள் என்று தங்களுடைய பெயரே விளம்பரப் படுத்துவது போல இருக்கிறதே. அப்படி இருக்க, அதைப் பற்றித் தாங்கள் சந்தேகப்படவே இடமில்லையே” என்றாள். கலியாணசுந்தரம் கரைகடந்த மகிழ்ச்சி அடைந்து, "ஓகோ நீ நிரம்பவும் புத்திசாலியாக இருக்கிறாயே. நான் பிறந்தது முதல் கலியாணசுந்தரம் என்ற பெயரையே சுமந்து திரிகிறேன். எத்தனையோ லக்ஷம் தடவை என்னை மற்றவர் அந்தப் பெயரால் அழைத்து விட்டார்கள். அந்தப் பெயரில் இப்பேர்ப்பட்ட ஒரு புதிய அர்த்தம் அடங்கி இருக்கிறது என்பது இப்போது நீ சொல்லத்தான் எனக்குத் தெரிந்தது' என்றான். வேலைக்காரி, 'அவரவர்களுடைய அருமை பெருமைகள் அவரவர்களுக்கே எப்படித் தெரியும். அது மற்றவர்களுக்குத் தான் தெரியும். அதுவும் தவிர, எங்களுடைய கலியாணத்தில் தாங்கள் சுந்தரமாக விளங்கப் போகிறீர்களோ, அவர்களுக்குத் தான் அந்த அர்த்தம் தென்படும்; மற்றவர்களுக்கு ஒருநாளும் தென்படாது. ஆகையால், எனக்கு இந்த அர்த்தம் தென்பட்டது ஒர் ஆச்சரியமாகுமா? ஒரு நாளும் ஆகாது' என்றாள். கலியாணசுந்தரம்: ஓகோ அப்படியாசங்கதி! நல்ல தாயிற்று. நீ சொல்வதைப் பார்த்தால், இந்தக் கலியாணத்துக்கு உரியவர்கள், நீ குறிக்கும்படியான அந்த உன்னத பதவியை எனக்குக்கொடுக்கத் தீர்மானித்து விட்டதாக அர்த்தமாகிறது. அப்படித்தானா? அவ்வளவு அபாரமான அதிர்ஷ்டமும் அளவில் அடங்காத ஆனந்தமும் எனக்குக் கிடைக்கப் போகின்றனவா? - வேலைக்காரி: ஆகா தடையென்ன? இவ்வளவு அபாரமான அதிர்ஷ்டமும், ஆனந்தமும் தங்களுக்குக் கிடைக்கப் போகின்றன என்று தாங்கள் சொல்வதைவிட