பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 113: அப்போதும் இருந்தது. அது அவ்வாறு இருந்ததைக் கண்டும் அந்த அழகிய மடந்தை மனம் தளர்வடையவில்லை. சிறிது நேரத்திற்குமுன் தான் நாற்காலியில் அகப்பட்டுக் கொண்டிருந்த காலத்தில் மருங்காபுரி ஜெமீந்தார். ஏதோ ஒரு கதவைத் திறந்து கொண்டு வந்த நினைவு தோன்றியது. ஆகையால், அந்த அதிதீர ரமணி அவ்விடத்தை விட்டு மறுபடியும் ரதிகேளி விலாசத்திற்கு வந்து சேர்ந்தாள். அதற்குள் ஒருவாறு தெளிவடைந்து பேசும் துணிவு பெற்ற மருங்காபுரி ஜெமீந்தார், அவள் மறுபடியும் திரும்பி வந்ததைக் கண்டு மிகவும் பரிதாபகரமானபார்வையாக அவளைப் பார்த்து, "பெண்மணிபூர்ணசந்திரோதயம் நான் உன் விஷயத்தில் செய்த தவறை மன்னித்துக் கொள். தயை செய்து என்னை இந்தத் துன்பத்திலிருந்து விடுவித்துவிட்டுப்போ எனக்குப்புத்தி வந்து விட்டது. இனிமேல் நான் உன்னைப்பற்றித் தவறான நினைவே கொள்ளமாட்டேன்' என்று கூறிக் கெஞ்சிமன்றாடினார். பூர்ணசந்திரோதயமோ அவர் சொன்ன சொற்களை இலட்சியம் செய்யாமல், கதவு எவ்விடத்தில் இருக்கிறது என்பதை ஆராய்ச்சி செய்யத் தொடங்கினாள். அதை உணர்ந்து மருங்காபுரி ஜெமீந்தார் மறுபடியும் அவளைக் கெஞ்சத் தொடங்கி, ‘பூர்ணசந்திரோதயம் என்ன நீ என்னிடத்தில் இவ்வளவுதூரம் வர்மம் பாராட்டுகிறாயே! நான் உன் விஷயத்தில் செய்ததவறுக்காக என்னை நீ இவ்வளவு நேரம் தண்டித்ததே போதுமான தாயிற்றே; இன்னமுமா நீ என்னை இழிவுபடுத்த வேண்டும். நான் திறந்துகொண்டு வந்த கதவு எங்கே இருக்கிறது என்று நீ தேடுகிறாய்! நீ எவ்வளவு தான் பிரயாசைப்பட்டாலும் எவ்வளவு நேரம் முயற்சி செய்தாலும் அந்த ரகசியமான கதவு எங்கே இருக்கிறது என்பதை நீ கண்டுபிடிக்க முடியாது. நீ தயை செய்து என்னை விடுவிப்பா யானால், நான் உனக்கு எவ்விதத் தீங்கும் நினையாமல், உன்னை வெளியில் அனுப்பிவிடுகிறேன்' என்றார்.