பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/199

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 187 ரகசியத்தில் வேறே ஏதேதோ ஏற்பாடுகள் செய்து கொண்டிருக்கிறீர்கள் போலிருக்கிறது. அந்த விவரத்தை இதுவரையில் என்னிடம் ஏன் வெளியிடவில்லை? அது எனக்குத் தெரியக்கூடாத விஷயமா? அது எனக்குத் தெரிந்திருந்தால், அதற்குத் தோதாக நான் இளவரசரிடத்தில் நடந்து கொள்ளலாமே" என்றாள். சாமளராவ், 'அந்த விவரம் உனக்குத் தெரியக்கூடாது என்ற எண்ணத்தோடு நாங்கள் அதை உன்னிடம் தெரிவிக்காமல் இருக்க வில்லை. இந்தப் பந்தய ஏற்பாட்டின் மூலமாகத் தந்திரம் செய்து, நீ எப்படியாவது இளவரசருடைய வாஞ்சை யையும் பிரேமையையும் முதலில் சம்பாதித்துக் கொண்டால், அதன் பிறகு மற்ற ரகசிய சமாசாரத்தை உன்னிடம் வெளியிடுவது நல்லது என்று நினைத்தோம். ஏனென்றால், எல்லா விஷயங்களையும் ஒருமுட்டாக உன்னிடம் தெரிவித்தால், நீ ஒருவேளை மலைத்து அஞ்சிப் பின் வாங்கிவிடுவாயோ என்று நாங்கள் எண்ணினோம். நீ இந்தப் - பந்தய விஷயத்தில் எவ்வளவோ திறமையாக நடந்து வெற்றியடைய வேண்டியவள். ஆகையால், நீ மற்ற எல்லா விஷயங்களையும் கேட்டு மலைப்பு அடைந்து இந்தப் பந்தய விஷயத்தில் ஏமாறிப் போய் விடுவாயோ வென்று நாங்கள் கவலை கொண்டிருந்தோம். இப்போது நீ இந்தப் பந்தய விஷயத்தில், நம்முடைய கருத்தை முற்றிலும் மகா சாமர்த்தியமாக நிறைவேற்றி விட்டாய். ஆகையால், இனி நீ மற்ற விவரத்தையும் தெரிந்து கொள்ளலாம். அதை உன்னிடம் இனி வெளியிடலாம் என்று அம்மாளும் என்னிடம் சொன்னார்கள். ஆகையால், அதையும் நான் இப்போது உனக்குத் தெரிவிக்கின்றேன். நம்முடைய இளவரசருக்கு எத்தனையோ வைப்பாட்டிமார்கள் இருந்தாலும், அவர் சாஸ்திரப்படி கல்யாணம் செய்துகொண்ட பட்டமகிஷி ஒரே ஒருத்திதான் என்பது உனக்குத் தெரிந்திருக்கும். அவளிடத்தில் நம்முடைய