பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/224

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

210 பூர்ணசந்திரோதயம்-2 ஹேமாபாயி அந்த ஏற்பாட்டை ஒப்புக்கொண்டவளாய் அவரிடம் செலவு பெற்றுக்கொண்டு வெளியில் போய் விட்டாள். 21-வது அதிகாரம் கொள்ளையும் - கொலையும் ஹேமாபாயியும் மாசிலாமணிப் பிள்ளையும் சனிக்கிழமை தினம் மாலையில் மேலே குறிக்கப்பட்டபடி சந்தித்துப் பேசிக் கொண்டிருந்த அதேசமயத்தில் அம்மன்பேட்டையில் கூத்தாடி அன்னத்தம்மாள் எவரும் அறியாதபடி தனது மாளிகையின் கொல்லைப் பக்கத்துக் கதவைத் திறந்துகொண்டு வெளியில் போய், தோட்டத்துக் கதவைத் திறந்து கொண்டு அப்பால் சென்று, அவ்விடத்தில் குறுக்கிட்ட சிறிய வாய்க்காலைக் கடந்து, வயல்களிடையில் போன ஒற்றையடிப் பாதையின் வழியாகக் கொஞ்சதுரம் நடந்துபோய், அவ்விடத்தில் இருந்த பாழ் மண்டபத்தை அடைந்தாள். அப்போது மாலை மயங்கும் சமயமாக இருந்தது. அந்த மண்டபம் இருந்த இடம் அந்த ஊருக்கு வெளியில் ஒதுப் புறமான ஒரு மூலையாதலால், அவ்விடத்தில் மனிதரது நடமாட்டமே காணப்படாதிருந்தது. அப்படிப்பட்ட இடத்திற்குப் போய்ச் சேர்ந்த அன்னத்தம்மாள் அங்கும் இங்கும் திரும்பிப் பார்த்தாள். அதன்பிறகு சிறிது நேரம் தயங்கி நின்ற பின் மண்டபத்துக்கு அருகில் நெருங்கித் தலையை நீட்டி அதற்குள் எட்டிப் பார்த்தாள். அந்த மண்டபம் இரண்டிரண்டு ஆட்கள் சுற்றிப் பிடிக்கத்தகுந்த பெரும் பெருங் கருங்கல் கம்பங்களுடையதாக இருந்தது. அன்றி அதன் ஒரு பக்கத்தில் பெருத்த திண்ணையையும் மறைவுச் சுவரையும் உடையதாக இருந்தது. அந்த மறைவிற்குள் அவள் தனது பார்வையைச் செலுத்தியபோது, அங்கிருந்து