பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/231

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 217 என்பதை நிச்சயித்துக் கொண்டாள். முன் பக்கத்து வாசற் கதவு வழக்கப்படி உட்புறத்தில் தாளிடப்பட்டது. பரதேசியின் ஆக்ஞைப்படி அவள் கொல்லைப் பக்கத்துக் கதவை உட்புறம் தாளிடாமல் வெறுமையாக மூடிவைத்துவிட்டுதனது புதல்வியர் நால்வரையும் அழைத்துக் கொண்டு நடுமத்தியில் இருந்த பந்தோபஸ்தான ஒர் அறைக்குள் போய் உட்புறத்தில் தாளிட்டுக் கொண்டவளாய் உட்கார்ந்து கொண்டாள். அப்போது அவளது மனதும் அவளது பெண்களினது மனமும் பட்டபாட்டையும் அடைந்த ஆவலையும் வேதனையையும் விவரித்துச் சொல்வது மகா அசாத்தியமான காரியம் என்றே சொல்ல வேண்டும். பெருத்த திகிலும் நடுக்கமும் தவிப்பும் அவர்களது மனத்தைப் புண்படுத்தி, தேகத்தை நரகவேதனைக்கு ஆளாக்கிக் கொண்டிருந்தன. இன்னதுதான் நடக்கப்போகிறது என்று நிச்சயமாக நம்பமாட்டாமல், அவர்கள் நெருப்பில் இருப்பவர்கள் போலத் தவித்திருந்தனர். பரமயோக்கியனாக நடந்து வரும் கந்தன் அப்படிப்பட்ட அயோக்கியத்தனத்தில் தலையிடுவானா என்ற சந்தேகமே பெரிதாக எழுந்து உலப்பத் தொடங்கியது. அப்படி உண்மையிலேயே அவன் உளவாக இருந்து திருடர்களை வரச் செய்திருந்தாலும் அந்த ரகசியம் இன்ஸ் பெக்டருக்குத் தெரிந்திருக்குமா என்ற எண்ணமும் தோன்றியது. ஒருகால் வேறே யாராவது தங்கள் வீட்டில் கொள்ளையடிக்க எண்ணி, அதற்கு அனுகூலமாக, வேலைக்காரர்களை எல்லாம் அனுப்பிவிட்டுக் கொல்லைக் கதவைத் திறந்து வைத்துவிட்டுத் தங்களையும் ஒர் அறைக்குள் போய் ஒளிந்துகொண்டிருக்கச் செய்துவிட்டால், திருடர்கள் சுலபமாக உள்ளே புகுந்து எவ்விதப் பூசலும் இன்றி எல்லாப் பொருட்களையும் அடித்துக் கொண்டு போகலாம் என்ற எண்ணத்தோடு திருடர்களேதங்களுக்கு நன்மை செய்கிறவர்கள் போல நடித்து இன்ஸ்பெக்டர் எழுதியதுபோல ஒரு கடிதமும் எழுதிவிட்டு பரதேசி வேஷம் போட்டு ஒருவனை அனுப்பி இருப்பார்களோ என்ற ஒரு முக்கியமான சந்தேகம் தோன்றி