பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/232

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

218 பூர்ணசந்திரோதயம்-2 அவர்களது மனதைச் சித்திர வேதனைக்கு உள்ளாக்கியது. அந்தப் பரதேசியின் சொல்லை வேத வாக்கியமாக நம்பி அப்படியே நடந்துகொண்டிருந்தாலும், முன்னெச்சரிக்கையாக சில ஆட்களை தயாரித்துத் தங்களுக்குப் பாதுகாப்பாக வைத்திருக்காமல் போனோமே என்ற எண்ணமும் தோன்றி மனதைப் புண்படுத்தியது. அவ்வாறு அவர்கள் சஞ்சலக் கடலில் ஆழ்ந்து மனம் நொந்து ஆவலே வடிவாக மாறி உட்கார்ந்திருக்கப் பொழுதும் போய்க் கொண்டிருந்தது. அவர்களது திகிலும், நடுக்கமும், குழப்பமும் வேதனையும் மலைபோலப் பெருகிக்கொண்டே போயின. அந்த நிலைமையில் மணி பதினொன்றாயிற்று. அவர்கள் இருந்த அறைக்குப் பக்கத்தில், வீட்டுக்குள் மனிதர்கள் நடந்ததனால் உண்டான காலடி ஓசை உண்டாயிற்று. அதைக் கேட்டவுடனே அன்னத்தம்மாள் முதலியோரது உடம்பு களெல்லாம் கரைகடந்து கிலியினால் கிடுகிடென்று ஆடத் தொடங்கின. வியர்வை வெள்ளம் குபிரென்று கிளம்பி அக்கினிக் குழம்புபோல வழிந்தோடுகிறது. மயிர் சிலிர்த்து விறைத்து நிற்கிறது. எழுந்து நிற்கக் கால் எழுமாட்டேன் என்கிறது. வாயைத் திறக்கமாட்டாமல் தொண்டை அடைத்துப் போய்விட்டது. அப்படிப்பட்ட பரமவேதனையான நிலைமையிலிருந்த அவர்களுள் அன்னத்தம்மாள் மெதுவாக எழுந்து தனக்குப் பக்கத்தில் இருந்த ஜன்னலண்டை நின்று, மூடப்பட்டிருந்த அதன் கதவிடுக்கில் வலது கண்ணை வைத்து, அப்புறம் என்ன நடக்கிறது என்பதைக் கவனித்தாள். வீட்டுக்குள் மங்கலாக ஒரு விளக்கு எரிந்து கொண்டிருந்தது. ஆகையால், வெளியில் யார் இருந்தார்கள் என்பதும், அவர்கள் என்ன செய்தார்கள் என்பதும் அவளுக்கு உடனே தெரிந்தன. இருபது இருபத்தைந்து போலீஸ் ஜவான்கள் கத்தி துப்பாக்கிகளை உபயோகிக்க ஆயத்தமாக ஏந்திய கைகளோடு சந்தடி செய்யாமல் முட்டுக் கல்களைப் போல அப்படி