பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/233

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 219 அப்படியே உட்கார்ந்திருந்ததைக் காண அதுகாறும் அவளது மனதை அழுத்திக்கொண்டிருந்த திகிலாகிய பெருஞ் சுமை ஒரு நிமிஷத்தில் விலகியது. அதுகாறும் தப்ப இயலாத மகா அபாய மான நிலைமையிலிருந்து தப்பி பந்தோபஸ்தான நிலைமைக்கு வந்து விட்டவள்போல, அவள் முற்றிலும் மனோதிடம் அடைந்ததன்றி, உடனே கீழே குனிந்து விஷயத்தை இரண்டொரு வார்த்தையில் சுருக்கமாகத் தனது பெண்களிடம் தெரிவிக்க, உடனே அவர்களும் துணிவும் குதூகலமும் அடைந்தவர்களாய், மாறிமாறி எழுந்து நின்று ஜன்னலின் கதவிடுக்கின் வழியாக வெளியில் பார்த்துப் பார்த்து மகிழ்ச்சியடைந்து அதன்பிறகு என்ன நடக்குமோ என்பதை அறிய ஆவல் கொண்டவர்களாய்த் துடி துடித்துத் தவித்திருந்தனர். அவ்வாறு வெளியில் வந்திருந்த ஜவான்களி டையில் இன்ஸ்பெக்டரது உடைகள் தரித்திருந்த கம்பீரமான தோற்றமுள்ள ஒருவரும் காணப்பட்டார். அவரது முகத்தை அன்னத்தம்மாள் உற்று நோக்கினாள். அவள் அதற்குமுன் அந்த முகத்தை எங்கேயோ பார்த்திருப்பதாக ஒரு நினைவு உண்டாயிற்று. அவள் இமை கொட்டாமல் சிறிது நேரம் அவரது முகத்தையே உற்று நோக்கிக் கொண்டிருக்க அவர் தமது தலையில் இருந்து வழிந்த வியர்வையைத் துடைப்பதற் காகத் தமது தலைப்பாகையைக் கழற்றித் தரையில் வைத்துவிட்டுப் சட்டைப் பையிலிருந்த முகம் துடைக்கும் சவுக்கத்தை எடுத்து தலையைத் துடைத்துக் கொண்டார். தான் அன்று சாயுங்காலம் பாழ் மண்டபத்தில் கண்டு பேசிய பரதேசியின் முகத்துக்கும் அந்த இன்ஸ்பெக்டரது முகத்துக்கும் நெருங்கிய ஒற்றுமை இருந்ததாக ஒரு நினைவு உண்டாயிற்று. ஒருவேளை அந்த இன்ஸ்பெக்டரே, தம்மை யாராகிலும் பார்த்துவிடப் போகிறார்களோ என்ற நினைவினால், பரதேசியைப்போல உருமாறி வந்திருப்பாரோ என்ற நினைவு தோன்றியது. மேலும் சிறிது நேரம் வரையில் அவரது முகத்தை அவள் பார்த்திருக்க, அந்தச் சந்தேகமே உண்மையாக இருக்க