பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/251

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் - 237 ஒரு பக்கமாகச்சாய்ந்து கொண்டாள். அதன் பிறகு சிறிது நேரம் வரையில் இருவரும் வாய் திறந்து பேசாமல் மெளனமாகவே இருந்தனர். மாசிலாமணிப் பிள்ளையின் கோபக் குறிகள் விலக, சந்தோஷக் குறிகள் தோன்றின. அவர் அடிக்கடி தனது மனைவியின் முகத்தை உருக்கமாகப் பார்த்துப் புன்னகை செய்து, 'ஏன் உன் முகம் வாட்டமாக இருக்கிறது? பலகாரம் ஏதாவது சாப்பிட்டாயா? அல்லது, இந்த அற்பசங்கதியை நினைத்து சாப்பாட்டைக் கூட விலக்கிவிட்டு சும்மாஉட்கார்ந்து கொண்டிருக்கிறாயா?" என்று வழக்கத்திற்கு மாறான வாஞ்சையோடு பேசினார். அவரது மாறுபட்ட நடத்தையைக் கண்ட அந்தப் பெண், அவர் ஏதோ சதியாலோசனை செய்து, அது சம்பந்தமாக தன்னிடம் ஏதோ பேசப்போகிறார் என்றும், அதன் பொருட்டே அவர் தன்னிடத்தில் அவ்வளவு பட்சமாகப் பேசுகிறார் என்றும் நிச்சயப்படுத்திக்கொண்டாள். அப்போது அவளுக்கு இன்னொரு விஷயம் நினைவுக்கு வந்தது. முதல் நாளிரவு இரண்டு மணி சமயத்தில் அண்ணாசாமி நாயக்கர் கதவைத் தட்டியபோது, தம்மைப் பிடித்துக் கொண்டு போகப் போலீசார் வந்திருக்கிறார்களோ என்று தனது புருஷன் பயந்து தாம் ஒரு முக்கியமான சங்கதியை வெளியிட நினைத்திருக்க, போலீசார் தம்மைக் கொண்டுபோக வந்திருக்கிறார்களே என்று அவர் சொன்னது அவளுக்கு நினைவு உண்டாயிற்று. ஆகவே, அவர் என்ன விஷயத்தைப் பற்றித் தன்னிடம் பிரஸ்தாபிக்கப் போகிறார் என்ற ஆவல் அவளது மனதை வதைத்தது. ஆனாலும், அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல், பணிவாகப் பேசத் தொடங்கி, சாப்பிடாமல் என்ன! அதெல்லாம் வழக்கம்போல ஆகிவிட்டது' என்றாள். மாசிலாமணிப்பிள்ளை:- அப்படியானால் சரிதான். வர வர எனக்கு இந்த ஊரில் பொழுதே போகமாட்டேன் என்கிறது. நாம் மைசூர் ராஜ்ஜியத்தில் இருந்தவரையில் நிரம் பவும்