பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/264

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23-வது அதிகாரம் எதிர்பாரா இடைஞ்சல்

  1. ெண்முகவடிவு கலியாண சுந்தரத்தைத் தஞ்சைக்கு அனுப்பிய பிறகு சில தினங்கள் கழிந்தன. தான்போய் நாலைந்து நாட்களுக்குள் திரும்பிவந்து விடுவதாக அவன் இந்த இளநங்கைக்கு வாக்குறுதி சொல்லிப் போனான். ஆகையால், அவள் நிரம்பவும் பாடுபட்டு ஐந்து நாட்கள் வரையில் பொறுத்திருந்தாள். அவள் நோயாளியான தனது அத்தையின்சுக செளகரியங்களை வழக்கப்படி கவனிப்பதில் மனத்தைத் செலுத்தி இருந்தாள். ஆனாலும், அடிக்கடிகலியாணசுந்தரத்தின் நினைவும் மனோகர வடிவமும் அவளது மனத்தில் தோன்றித் தோன்றி மறைந்துகொண்டிருந்தன. ஆகையால் இன்னதென்று விவரிக்க முடியாத ஒருவிதப் பேரின்பம் ஊற்றெடுத்துப் பொங்கி எழுந்து உற்சாகமும் குதூகலமும் உண்டாகிக் கொண்டிருந்தன. சிறிதும் ஓயாத மனவெழுச்சியும் உற்சாகமும் கொண்ட அந்தப் பெண்மணி சரியானபடி உண்ணமாட் டாமலும் உறங்கமாட்டாமலும் சதா சர்வதா சஞ்சலத்திற்கு இரையாகித் தத்தளித்த வண்ணமிருந்து வந்தாள். ஐந்து நாட்கள் கழிய, ஆறாம் நாள், ஏழாம் நாளும் கழிந்தது. தனது ஆருயிர்க் காதலனான கலியாணசுந்தரம் வருவான் வருவான் என்று வழி பார்த்துப் பார்த்து அவளது அழகிய கண்களும் பூத்துப் போயின. பக்கத்திலுள்ள ராஜபாட்டையில் ஏதாவதொரு வண்டி வந்த ஒசையுண்டானால், அவளது உடம்பு திடுக்கிட்டு எழுந்திருக்கும். அவள் உடனே தாழ்வாரத்திற்குப் போய் அந்த வண்டிதங்களது பங்களாவிற்குள் நுழைகிறதாவென்று ஆவலோடு பார்த்திருந்து, அந்த வண்டி அப்பால் போவதைக் கண்டு ஏங்கிப் போய்த் திரும்பி உள்ளே வருவாள். ஒவ்வொரு நாளும் காலையில் தபாற்காரன் வரும்