பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/275

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 261 நான் வந்தது முதல் இவர்கள் என்னைத் தரையில் கூட நடக்கவிடாமல், கண்மணியை இமைகள் காப்பதுபோல, அன்னை ஹிருதய கமலத்தில் காப்பாற்றி வருகிறார்கள். இவர்களுக்கு ஏராளமான சம்பத்திருக்கிறது. இவர்கள் அன்னையே அபிமான புத்திரியாக ஏற்றுக்கொண்டு இவர்களுக்குப் பிறகு சகலமான சொத்துக்களையும் எனக்கே கொடுத்து விடுவதாகச் சொல்லுகிறார்கள். இவர்கள் தங்களுடைய சொத்துக்களைக் கொடுத்தாலும் கொடுக்கா விட்டாலும் அதைப் பற்றியே நான் இப்போது இங்கே இருக்கவில்லை. வயோதிகரான சோமசுந்தரம்பிள்ளை படுத்த படுக்கையாக இருக்கிறார். அவருக்குக் கஞ்சி இறங்குவது கூட மகா துர்லபமாக இருக்கிறது. அப்படிப்பட்ட ஆபத்து காலத்தில் நான் இவர்களைக் கைவிட்டு வருவது தருமமும் ஆகாது; அதைப் பார்த்த பிறர் பழிப்பதற்கும் இடம் ஏற்படும். ஆகையால், நான் இப்போது இவ்விடத்தை விட்டு வரமாட்டாதவளாக இருக்கிறேன். இன்னம் எவ்வளவு காலத்துக்கு நான் இப் படிப்பட்ட நிர்பந்தத்தில் இருக்க நேருமோ என்பதையும் நாம் இப்போது முன்னாக நிர்ணயிக்க முடியாது. ஆகையால், நான் வருவேன் வருவேன் என்று நீங்கள் அதற்காக வெகுகாலம் கலியாணத்தை நிறுத்தி வைப்பதும் சரியல்ல. என் தங்கையோ ஆண் பிள்ளையின்றி அநாதையாக இருந்து வருகிறாள். நீங்கள் அவளைக் கட்டிக்கொண்டால்தான், நீங்கள் அவளுக்கு ஆண் துணையாக இருப்பது கிரமமானதாக இருக்கும். இல்லாவிட்டால், பார்ப்பவர்கள் நகைக்க இடம் உண்டாகும். ஆகையால், இரண்டு இடங்களிலும் உள்ள அசந்தர்ப்பமான நிலைமையை உத்தேசித்து நீங்கள் நானில்லா விட்டாலும் எப்படியாவது இந்தக் கலியாணத்தை உடனே நடத்தி விடுவதே யுக்தமாகத் தோன்றுகிறது' என்று நிரம்பவும் நயமாகவும் உருக்கமாகவும் சொன்னாள். அவள் சொன்னது நியாயமான வார்த்தையாக எனக்கும் தோன்றியது. ஆகையால், அதற்குமேல் நான்