பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/282

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

268 - பூர்ணசந்திரோதயம்-2 அம்மாளிடம் கேட்டுத் தெரிந்து கொண்டேன். அதுவுமன்றி, நேற்று ராத்திரி என்னைத் தூக்கிக் கொண்டு வந்து உயிர் கொடுத்துக் காப்பாற்றி இவ்வளவு தூரம் எனக்கு உபசரணை செய்ததிலிருந்தே தங்களுடைய குணம் எவ்வளவு மேன்மையானது என்பதை நான் நிதரிசனமாகக் கண்டு கொண்டேன். ஆகையால், நான் என்னுடைய வரலாற்றைத் தங்களிடம் தெரிவிப்பதோடு, வேறு சில பயங்கரமான ரகசியங்களையும் தங்களிடம் தனியாக வெளியிட எண்ணுகிறேன். என்னுடைய சங்கதிகளையெல்லாம் தாங்கள் கேட்டால், என்மேல் தாங்கள் இதுவரையில் வைத்த அன்புக்கு நான் நிரம் பவும் பாத்திரமானவள் என்று தாங்கள் நினைப்பதோடு, என்னைக் கடைசிவரையில் காப்பாற்றி எனக்கு நல்ல வழி காட்டுவீர்கள் என்று நினைக்கிறேன். ஆனால் ஒரு விஷயம் இருக்கிறது. தாங்கள் மேலான ஜாதியில் பிறந்தவர்கள்; நானோ இழிவான தொழில் செய்யும் ஜாதியைச் சேர்ந்தவள். என்னுடைய வரலாற்றைக் கேட்டவுடன், என்னை உங்களுடைய விட்டில் சேர்த்து எனக்கு இவ்வளவு தூரம் உபசரணை செய்ததைப் பற்றித் தாங்கள் ஒருவேளை சங்கடப்பட நேரும்" என்று சொன்னாள். அதைக் கேட்ட நான், 'பெண்ணே நீ யாராக இருந்தாலும், அதைப் பற்றி எனக்குக் கவலை இல்லை. ஒரு மனிதர் அபாயத்தில் இருந்தால், அவர்களுடைய ஜாதி என்ன மதமென்ன என்றுகேட்டு, அதற்குத் தகுந்தபடிதான் உதவி செய்ய வேண்டும் என்பது பொது தர்மமாகுமா? அது ஜீவகாருண்ய மாகுமா? ஒருநாளும் ஆகாது. ஆபத்து காலத்தில் எல்லோரும் ஒன்றுதான். கேவலம் ஒரு புழுவாக இருந்தாலும், அதற்கு ஒர் அபாயம் வருமானால், அதை நாம் காப்பாற்ற வேண்டுமேயன்றி, அது புழுவாயிற்றே என்று நாம் அலட்சியம் செய்வது கொஞ்சமும் தகாது. ஆகையால், நீ யாராக இருந்தாலும் பரவாயில்லை. வெளியிடலாம். நான் உனக்கு