பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/296

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

282 பூர்ணசந்திரோதயம்-2 விட, நூறுமடங்கு அதிகமான புண்ணியம் தங்களுக்கு லயிக்கும் படி தாங்கள் ஏதாவது உபாயம் செய்து, அந்த மகா உத்தமியான லலித குமாரி தேவிக்கு என் சகோதரிகளால் ஏற்படப்போகும் இடரை விலக்க வழி தேட வேண்டும். ஆனால், அதனால் என் தாயாருக்கும், என் சகோதரிமார் களுக்கும், எவ்விதமான பொல்லாங்கும் நேராதபடி பார்த்துக் கொள்ள வேண்டும். இதுதான் நான் தங்களைக் கேட்டுக் கொள்வது என்று நிரம்பவும் உருக்கமாகவும் பரிதாபகரமான குரலோடும் சொன்னாள். அவளது மகா துக் ககரமான வரலாற்றைக் கேட்க, என் மனம் கரைந்து உருகிப் போய் விட்டது. அவள் விஷயத்தில் அளவற்ற இரக்கமும் பிரியமும் உண்டாயின. நான் உடனே அவளைப் பார்த்து, “சிவபாக்கியம்; நீ இனி என்தப் பற்றியும் கவலைப்படத் தேவையில்லை. நான் உடனே புறப்பட்டு அம்மன்பேட்டைக்குப்போய், உன்னுடைய சகோதரிகள் புறப்பட்டுப் போய் விட்டார்களா என்பதைத் தந்திரமாக அறிந்து கொள்ளுகிறேன். அவர்கள் இன்னமும் புறப்பட்டுப் போகாமல் இருந்தால், அவர்களை அனுப்பாமல் பெரிய ராணி தடுத்துவிடும்படி நான் சில பெரிய மனிதர்களைக் கொண்டு ஏற்பாடு செய் கிறேன். அவர்கள் புறப்பட்டுப் போயிருந்தால், நானும் இன்றையதினமே புறப்பட்டுப் பூனாவுக்கு நேரில் போய், இதற்குத் தகுந்த மனிதர்களைப் பிடித்து பட்டமகிஷியை எச்சரித்துவிட்டு வரத் தீர்மானித்து விட்டேன். இந்த விஷயத்தில் வேறே யாரையாவது நம்பி அனுப்பி வைத்தால், காரியம் ஒழுங்காக நிறைவேறாது. அவர்கள் உன் சகோதரிகளுக்குக் கெடுதல் உண்டாகும் படி தாறுமாறாக நடந்து கொள்வார்கள். நீ அக்கிரமத்தில் இறங்கக் கூடாது என்ற மேன்மையான குணத்தினால், உன்னுடைய மனிதர்களையும், வீட்டையும், செல்வத்தையும் துறந்து அநாதையாகவும் பரதேசியாகவும் வெளியில் கிளம்பி விட்டாய். உன் விஷயத்தில் என் மனசில் ஏற்பட்டிருக்கும் மதிப்புக்கும் இரக்கத்துக்கும் அளவு சொல்லமுடியாது. எவ்வித