பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/308

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

294 பூர்ணசந்திரோதயம்-2 அதைக்கேட்க, அந்தச் சங்கடத்தில் தான் என்ன செய்கிறது என்ற கவலை கலியாணசுந்தரத்துக்கு உண்டாகிவிட்டது. தான் அந்தப் பெண்களுடன் கூடவே போகவேண்டும் ஆதலால், எப்படியாவது முயற்சி செய்து மறுநாள் காலையில் தனக்கு ஒரு வண்டி சேகரம் செய்து கொடுத்தால், இன்னமும் ஏதாவது வெகுமதி கொடுப்பதாக அவன் அவரிடம் வற்புறுத்திக் கூற, அந்த மணியக்காரர் நல்ல கூர்மையான புத்தியுள்ள மனிதராகையால் அவனது உட்கருத்து இன்னது என்பதை ஒருவாறு யூகித்துக் கொண்டு, “சரி; இந்தப் பெண்களோடு சிநேகம் செய்துகொள்ள வேண்டுமென்ற எண்ணம் போலிருக்கிறது?’ என்று புன்னகை செய்த முகத்தோடு கூறினார். அதைக் கேட்ட கலியாண சுந்தரமும் மகிழ்ச்சியாகப் புன்னகை செய்து, 'ஆம்; அதுதான் என்னுடைய எண்ணம்; எனக்காக வேறே தனி வண்டி ஒன்று கிடைக்காவிட்டாலும் அவர்கள் போகும் பெட்டி வண்டியி லேயே எனக்கும் உட்காரக் கொஞ்சம் இடம் கிடைக்குமானால் அது அதிக உசிதமாய்ப் போகும்; உம்மை நான் மறக்கிறதே இல்லை' என்றான். அதற்குமேல் அந்த மணியக்காரர் அவனிடம் ஒரு வார்த்தையும் பேசவில்லை; தாம் போய் முயற்சித்துப் பார்ப்பதாக வாக்குறுதி சொல்வதுபோல அவரது கண்களின் ஜ்வலிப்பினால் தெரிய வந்தது. அவர் உடனே அவனை விட்டு அந்தத் தாதிப் பெண்கள் இறங்கி இருந்த இடத்துக்குப் போய்விட்டார். அந்தத்தாதிப்பெண்கள் வந்து இறங்கிய முதல், ராஜாவினது உத்தரவுப்படி அவர்களுக்கு வேண்டிய சகலமான வசதிகளையும் செய்து கொடுத்தவரும், மறுநாளைய பிரயாணத்துக்குத் தேவையான வண்டிகளை அனுப்புவதாக ஒப்புக் கொண்டிருந்த வரும் அதே மணியக்காரர் ஆதலால், அவரிடத்தில் அந்தத் தாதிப் பெண்கள் மூவருக்கும் முத்துலக்ஷ்மிக்கும் நிரம்பவும்