பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Jó பூர்ணசந்திரோதயம்-2 ്ള ஆடைகளை வரிந்து கட்டிக்கொண்டு, விரல்களைக் கீழே ஊன்றி ஒட்டமாக அந்த இடத்தை விட்டு முன் கட்டை நோக்கி ஒடினாள். எங்கும் இருள்மயமாக நிறைந்திருந்ததாலும், அந்தக் கட்டிடம் அவளுக்குப் புதியதாகையாலும் அவள் தட்டுத் தடுமாறி இடறி விழுந்து இரண்டொரு நிமிஷ நேரத்திற்குள் முன் கட்டை அடைந்து, முன்புற வாசலண்டை போய் நின்று உட்புறத் தாழ்ப்பாளை மெதுவாக விலக்கிவிட்டுக் கதவைத் திறந்தாள். கதவு வரவில்லை; அது வெளிப்பக்கத்திலும் தாளிடப்பட்டிருக்கிறது என்பது ஒரேநொடியில் நிச்சயமாயிற்று. உடனே அவளது உற்சாகமும் நம்பிக்கையும் சடக்கென்று மாறிப் போயின, நாடிதளர்ந்துபோய்விட்டது. அதற்கு மேல்தான்தப்ப வகையில்லை ஆகையால், அன்று தனக்கு மானபங்கம் ஏற்படுவது நிச்சயம் என்ற திகில் உண்டாகிவிட்டது. அதற்கு மேல் தான் என்ன செய்வது என்பதை அறியமாட்டாமல் கலங்கிக் குழம்பி பெருங்கிலி கொண்டு ஸ்தம்பித்துக் கதவண்டையில் நின்று விட்டாள். அவ்வாறு இரண்டொரு நிமிஷ நேரம் கழிந்தது. தான் அந்தக் கதவை மறுபடியும் உட்புறத்தில் தாளிட்டுக் கொண்டு சன்னியாசியை உள்ளே வரவிடாமல் வெளியிலேயே நிறுத்தி வைக்கலாமா என்ற நினைவு உண்டானதானாலும் தான் அப்படிச் செய்தால் கூரை மேல் ஏறிவரும் முரடர்கள் உடனே உள்ளே குதித்துத் தன்னையும் பிடித்துக்கொண்டு, கதவையும் திறந்து விடுவார்கள் என்ற நினைவு உண்டாயிற்று. ஆகையால், தான்கதவைத்திறந்து விடுவதுதான் சந்தேகத்திற்கு இட மில்லாத காரிய மென்ற எண்ணம் தோன்றியது. ஆகையால், அந்தப் பேதை மடவன்னம் கதவின் தாளை மறுபடியும் மாட்டாமல், கலக்கமும், திகிலுமே வடிவெடுத்ததுபோல அப்படியே நின்று கொண்டிருந்தாள். அடுத்த நிமிஷத்தில் கபடசன்னியாசி உள்ளே வந்துவிடுவானே என்றும், தான் எப்படித் தப்பிப் போகிறது என்றும் நினைத்துக் கதிகலங்கிக் கையைப் பிசைந்துகொண்டு சித்திரவதைப்பட்டவளாய் இருக்க, இன்னொரு