பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 பூர்ணசந்திரோதயம்-3 சொல்லி எழுப்ப, அவர்கள் இருவரும் திடுக்கிட்டு எழுந்து உட்கார்ந்தனர். அந்த அகாலத்தில் எப்போதுமில்லாமல், லீலாவதி அந்த அறைக்குள் வந்ததைப் பற்றி அவர்கள் பெரிதும் திகைப்படைந்து விஷயம் என்னவாக இருக்குமோ என்று கவலை கொண்டு அவளை வியப் போடு பார்த்தனர். கூச்சலிடாமல் சாந்தமாக இருக்கும்படி லீலாவதி அவர்களுக்குச் சைகைகாட்டினாள். அவளிடத்தில் அவர்கள் பலவகையானநன் மைகள் பெற்றிருந்தவர்கள். ஆதலால், அவளது விஷயத்தில் அவர்கள் நிரம் பவும் நன்றி விசுவாசமும், அந்தரங்கமான அபிமானமும் அடைந்தவர்களாக இருந்தனர். அதுவுமன்றி மாசிலாமணிப்பிள்ளை இயற்கையிலேயே துஷ்டகுணமும் துர் நடத்தையும் உள்ளவர் ஆதலால், அவரிடத்தில் அவர்களுக்குச் சிறிதும் அபிமானமே இல்லாது இருந்தது. அவர் லீலாவதியை ஏதோ காரணம் பற்றி அடிக்கடி வருத்தி உபத்திரவம் செய்கிறார் என்பதை ஒருவாறு உணர்ந்திருந்தவர்கள் ஆதலால், அந்த அகாலத்தில் லீலாவதி சந்தடி செய்யாமல் ரகசியமாக வந்ததைக் கண்டு, புருஷனுக்கும் பெண்ஜாதிக்கும் ஏதோ விபரீதமான சச்சரவு ஏற்பட்டிருப்பதாகவும், அது சம்பந்தமாக லீலாவதி தங்களிடம் ஏதோ உதவியை நாடி வந்திருக்கிறாளென்றும் அவர்கள் யூகித்துக் கொண்டார்கள். உடனே தோட்டக்காரன் லீலாவதியைப் பார்த்து நிரம்பவும் அன்பாகவும் பணிவாகவும் பேசத் தொடங்கி, 'என்ன விசேஷம் அம்மணி! எங்களால் ஏதாவது காரியம் ஆகவேண்டுமா?’ என்றான். உடனே "ஆம், நீஅவசரமாக ஒரு காரியம் செய்ய வேண்டும். அதோடு, நீ இப்போது செய்யும் காரியம் என் புருஷனுக்காவது வேறே யாருக்காவது தெரியவே கூடாது' என்றாள். தோட்டக் காரன் பிரியமாக, 'அம்மணி உங்களுக்கு என்ன காரியம் ஆக வேண்டும்? சொல்லுங்கள். ஒரு நொடியில் முடித்து வைக்கி றேன். அதுவுமன்றி அதை எவரும் தெரிந்து கொள்ளாதபடி பரம ரகசியமாகவே செய்து முடிக்கிறேன். நீங்கள் கொஞ்சமும் யோசிக்காமல் சங்கதியைச் சொல்லலாம்” என்றான்.