பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 பூர்ணசந்திரோதயம்-3 பக்கத்தில் நீளும் கவைகளை மடக்கிவிட்டு அதை அதிக துரிதத்தில் சரிப்படுத்த வேண்டும் என்றும், அதற்குள் அவர் வந்து விட்டால், தான் உட்புறத்துத் தாழ்ப்பாளைப் போட்டுக் கொள்ள வேண்டுமென்றும் அவள் தீர்மானம் செய்துகொண்டு படுதாவை விட்டுத் தனது விரல்களைக் கீழே ஊன்றியபடி சிறிதும் ஓசை உண்டாகாதபடி வெளியில் வந்து இரண்டோரடி எடுத்துக் கூடத்தில் வைக்க, அந்தச் சமயத்தில், சமையலறைக்குள் திடீரென்று உண்டான விளக்கு வெளிச்சத்தைக் கண்டு அவள் திடுக்கிட்டுத் தனது முகத்தை அந்தப் பக்கமாகத்திருப்பி, வெளிச்சம் உண்டான இடத்தைப் பார்த்தாள். பார்க்கவே, அவ்விடத்தில் ஆஜானுபாகுவாய் பயங்கரமான விகாரத் தோற்றத்தோடு விளக்கும் கையுமாக அந்த மனிதன் நின்று கொண்டிருக்கக் கண்டாள். அங்கே நின்ற மனிதன் தனது புருஷன் அன்று என்பது அவளுக்கு உடனே தெரிந்து விட்டது. அதுவரையில் அவளை நரகவேதனைக்கு ஆளாக்கிக் கொண்டிருந்த ஒருவிதமானதிகில் ஒழிந்து போனது. ஆனாலும், அவளது மனதில் வேறுவிதமான பேரச்சமும், சந்தேகங்களும், கலக்கமும் உண்டாகி அவளை மட்டுக்கடங்கா வேதனையில் ஆழ்த்தின. சமையலறைக்குள் தோன்றிய விளக்கின் பிரகாசத்தில் அவள் அந்த மனிதனை உற்றுப் பார்த்ததில், அதற்குமுன் இரண்டு தடவைகளில் தான் அந்த மனிதனைப் பார்த்திருந்தது அவளுக்குச்சந்தேகமற விளங்கியது. இளவரசரையும், தனது பெரிய தகப்பனாரையும் பலவந்தமாகப் பிடித்துக் கொணர்ந்து தஸ்தாவேஜு எழுதி வாங்கிய இரவில், தனது புருஷருக்கு உதவியாக வந்திருந்த திருடர்களோடு அந்த மனிதனும் வந்திருந்ததாக அவளுக்கு நினைப்பு உண்டாயிற்று. இன்னொரு நாள் இரவில் வெந்நீர் அண்டாவிற்குள் இருந்த பிணத்தை எடுத்து அடக்கம் செய்தகாலத்தில் தோட்டத்தில் குழி வெட்டிய மனிதனும் அவனே என்ற எண்ணமும் உண்டாயிற்று. அந்தக் காலத்தில் அவனைத் தனது புருஷர் கட்டாரி என்று கூப்பிட்டதை அவள் தனது திகிலில் கவனித்து நினைவில்