பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 125 வைத்துக் கொள்ளவில்லை. ஆகையால், அவனது பெயர் என்னவென்று அவளுக்கு இப்போது நினைவு உண்டாக வில்லை. இருந்தாலும், அவன் கேவலம் திருடரைச் சேர்ந்த கீழ்ச்சாதி மனிதன் என்பது அவளுக்குச் சந்தேகமறத் தெரிந்தது. ஆகவே, அவன் அந்த அகாலவேளையில் மேன்மாடத்திலிருந்து சந்தடி செய்யாமல் திருட்டுத்தனமாக வந்ததன் முகாந்திரம் என்னவாக இருக்கலாம் என்று அவள் சிந்திக்கலானாள். அவன் ஒருவேளை தனது புருஷருக்குத் தெரியாமல் வந்து பங்களாவிலிருக்கும் பொருள்களையெல்லாம் கொள்ளை யடிக்கும் கருத்தோடு வந்திருப்பானோ என்ற சந்தேகமே முதன்முதலில் அவளது மனதில் உண்டாகியது. அந்தச் சமயத்தில் தான் கூச்சலிட்டுத் தனது புருஷரையும், வேலைக்காரர்களையும் அண்டை வீட்டுக் காரர்களையும் கூட்டலாமா என்ற நினைவு உண்டாயிற்று. தனது கூக்குரலைக்கேட்டுத் தனது புருஷர் கீழே இறங்கி வந்து என்ன விசேஷம் என்று கேட்டால், வெளியில் யாரோ திருடன் வந்து சாமான்களை உருட்டியதைக் கண்டு, தான் தனது அறைக்குள் இருந்தபடி தாழ்ப் பாளை விலக்கிக் கொண்டு வெளியில் வந்ததாகச் சமாதானம் சொல்லிவிட்டால், அது பொருத்தமாக இருப்பது பற்றித் தமது புருஷர் அதை உண்மை என்று நம்புவதோடு தான் கடிதம் எழுதி அனுப்பியதைப் பற்றியும் சிறிதும் சந்தேகம் கொள்ளமாட்டார் என்று அவள் எண்ணிக் கொண்டாள். அந்தச் சமயத்தில் அந்தத் திருடன் அங்கே வந்தது தனக்கு நிரம்பவும் அனுகூலமான் சம்பவமென்று நினைத்து, அவள் கூகூவென்று கூச்சலிட வாயைத் திறக்கப் பேர்னவள் தற்செயலாக மறுபடியும் தனது பார்வையைச்சமையலறைக்குள் செலுத்தி அவ்விடத்தில் அந்தத் திருடன் என்ன செய்கிறான் என்று கவனித்தாள். அந்த விகாரமான மனிதன் தனது கையில் விளக்கை வைத்துக் கொண்டபடி அங்கும் இங்கும் தேடி, ஒரு பாத்திரத்தை எடுத்து, அவ்விடத்தில் ஒரு மூலையில் வைக்கப்பட்டிருந்த பானையின் மூடியைத் திறந்து அதற்குள்