பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 量33 அவளைச் சிறைப்படுத்தி வைத்ததன் பலனாகவே அவள் அவ்வளவு தூரம் படிமானத்திற்கு வந்திருக்கிறாள் என்று நினைத்தவராய் அவளை நோக்கி பிரியமாக நகைத்த வண்ணம், 'ஒகோ; கடைசியில் குற்றத்தை என்மேலா சுமத்துகிறாய்? எப்போதும் பெண்பிள்ளைகள் மகா தந்திரசாலிகள் என்று சொல்வது சரியாய்ப் போய்விட்டதே! நேற்று ராத்திரியும் நான் உன்னோடு சண்டையிட ஆரம்பிக்கவில்லை. இப்போதும் நான்கேட்ட முதல் கேள்வியிலிருந்து உன்னுடைய பிரியம் எப்படி இருக்கிறது என்பதை அறிந்து அதற்குத்தகுந்தபடிநடந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம்கொண்டு தான் வந்தேன் என்பது உனக்கு நன்றாகத் தெரிந்திருக்கும். ஆகையால், உன்னோடு அநாவசியமாகச் சண்டைபோட நான் ஒருநாளும் பிரியப்படுகிறவனல்ல. உனக்கும் என்னைவிட்டால் வேறே. திக்கில்லை. எனக்கும் உன்னைவிட அந்தரங்கமான மனிதர் வேறு எவருமில்லை. அதுவுமின்றி என்னுடைய ரகசியம் எல்லாம் உனக்குத் தெரிந்திருக்கிறது. அதுபோல உன்னுடைய ரகசியமெல்லாம் எனக்குத் தெரிந்திருக்கிறது. நாம் ஒருவருக்கொருவர்உதவியாகவும், அதுகூலமாகவும் இருந்தால், இரண்டு பேருக்கும் சுகமுண்டாகும். நாம் ஒருவரையொருவர் விட்டுப்பிரிந்து போவதனால், எவ்வித நன்மையும் உண்டாகப் போகிறதில்லை. ஒருவேளை கெடுதல்தான் உண்டாகலாம்' என்று முன்னிலும் அதிக அன்பாகக் கூறியவண்ணம் அவள் நின்ற இடத்திற்குப்போப் பக்கத்தில் இருந்த கட்டிலின்மீது உட்கார்ந்த வண்ணம் தமது கையை மெதுவாக அவளது தோளின் மீது வைத்துத் தடவிக் கொடுத்தார். லீலாவதி நிரம்பவும் லஜ்ஜையடைந்தவள்போலத்தத்தளித்து 'நேற்று ராத்திரி நடந்த விஷயங்களையெல்லாம் நீங்கள் எடுத்துச் சொல்லும்போது, என் உடம்பு குன்றிப்போகிறது. அவைகளை இனி வாயில் வைத்துப் பேசுவதுகூட எனக்குப் பிடிக்கவில்லை. நீங்கள் என்னைத் தனியாக விட்டுப்போனது