பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 பூர்ணசந்திரோதயம்-3 தங்கையான சிவபாக்கியம் என்னிடம் நடந்து கொண்ட மாதிரிக்கும், நீ இப்போது என்னிடம் நடந்து கொள்ளும் மாதிரிக்கும் எவ்வளவு பேதம் இருக்கிறது தெரியுமா? அவளைவிட வயசிலும் அனுபவத்திலும் நீ எவ்வளவோ மேலானவளாக இருந்தும், நீ இப்படி நடந்து கொள்வதையும் பேசுவதையும் காண, என் மனம் நிரம்பவும் சங்கடப்படுகிறது. நீ பேசும் வார்த்தைகளினுடைய கருத்தை அறிந்து கொள்ளாதவன் போல இனியும் நான் பாசாங்கு பண்ண முடியாது. அப்படிச் செய்தால், என் மனசு அருவருக்கத்தக்க இந்த விஷயத்தை நீ மேன்மேலும் வாயில் வைத்துப் பேசுவதற்கு நானே காரணமானவன் ஆவேன். ஆகையால், நான் ஒரே வார்த்தையில் விஷயத்தைச் சொல்லி விடுகிறேன். அதை மனதில் வைத்துக் கொள். என்னுடைய மனசையும் காதலையும் கவர்ந்துகொண்ட பெண் வேறொருத்தி இருக்கிறாள். அவளை நான் அதிசீக்கிரத்தில் கலியாணம் செய்து கொள்ளப் போகிறேன். அவள்மேல் வைத்த ஆசையை நான் இன்னொருத்தியின்மேல் திருப்ப என்னால் சாத்தியப் படாது. அவளுடைய நினைவும் வடிவமும் சதாகாலமும் என் மனசிலேயே இருந்து வருவதால், வேறு எந்த ஸ்திரீயையும் பார்க்கவும் கண்கூசுகிறது. அன்னிய ஸ்திரீ என்னை ஏறெடுத்துப் பார்த்தாலும் என்னைத் தொட முயன்றாலும், சகிக்க முடியாத லஜ்ஜையும் அருவருப்பும் உண்டாகின்றன. அதுவும் தவிர, நான் யாரைக் கலியாணம் செய்துகொள்ள உத்தேசித்து இருக்கிறேனோ, அவள் மகா அருமையான குணங்கள் வாய்ந்த சுத்த ஸ்வரூபிணி. நான் நற்குணமும் பரிசுத்தமான நடத்தையும் வாய்ந்தவன் என்பதை அறிந்து, அந்தக் காரணத்தினாலேயே அவள் என்னைக் கட்டிக் கொள்ள இணங்கியிருக்கிறாள். ஆகையால், நான் இப்படிப்பட்ட துர்க் குணத்தில் இறங்குகிறேன் என்ற சங்கதி அவளுக்குத் தெரிந்தால், அவளுடைய மனம் புண்படும். அதுவும் அன்றி, என் மனப்போக்கும் இப்படிப்பட்ட ஸ்திரீ நட்பை முற்றிலும்