பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 1.45 கொள்ளுங்கள்' என்று பலவாறு பிரலாபித்து அழத் தொடங்கி ஆவேசம் கொண்டவள் போலத் தனது கேசத்தை விரித்துத் தாறுமாறாகத் தொங்கவிட்டபடி ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்து மாசிலாமணிப் பிள்ளையை இறுகப் பிடித்துக் கொண்டு அமர்க்களம் செய்கிறாள்; வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொள்ளுகிறாள். கண்ணிரை ஆறாகப் பெருக்கிக் கல்லும் கரையும்படி அழுது உருகுகிறாள். அவள் செய்யும் ஆரவாரத்தையும், அவளது பரிதாபகரமான நிலைமையையும் கண்டு நிரம் பவும் சஞ்சலம் அடைந்து கலங்கிய மாசிலாமணிப்பிள்ளை அவளது முகத்தைப் பார்த்து, கைப்பெட்டியிலுள்ள தஸ்தாவேஜூயை அவள் எடுத்து பத்திரப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தாம் அதற்கு முன் அவளிடம் சொல்லி வைத்திருந்ததை நினைப் பூட்டுகிறவர் போலக் கண்ணிமைகளால் சைகை செய்து, "லீலாவதி! நீ ஏன் இப்படி வருத்தப்படுகிறாய்? இவர்கள் என்னைப் பிடித்துக் கொண்டு போவதனாலேயே, நான் தண்டனை அடைந்து விடுவேன் என்று நினைத்துக் கொண்டாயா மடியில் கனமிருந்தால்தானே வழியில் பயம் ? நாம் குற்றம் செய்திருந்தால்தானே நமக்கு அச்சம்? எவ்விதத் தண்டனையும் இல்லாமல் தப்பித்துக் கொண்டுவர, நம்மிடம் போதுமான ஆதாரமிருக்கையில் நமக்கு என்ன கவலை? நீ ஏன் இப்படி அழுகிறாய்? நீ மறைவாகப் போ; இவர் என்ன சொல்லப் போகிறார் என்பதை நான் கேட்டு அறிந்து கொள்ளுகிறேன்" - என்று அன்பாக வற்புறுத்திக் கூறினார். அப்போது அங்கே வந்திருந்த மனிதர் இதற்குமுன் நமது கதையில் பல சந்தர்ப்பங்களில் வந்து மருங்காபுரி ஜெமீந்தாருக்கு உதவி செய்துள்ளவரும், அம்மன்பேட்டைக் கூத்தாடிச்சி அன்னத்தம் மாளினது வீட்டில் கொள்ளை நடந்ததைத் தடுத்தவருமான ரகசியப் போலீஸ் இன்ஸ்பெக்டர். அவர் உத்தியோக முறைமைப்படி உடைகள் அணியாமல்