பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/166

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162 பூர்ணசந்திரோதயம்-3 பாளையக் காரருக்கு இணங்கிக் களங்கப்பட்டுப் போன அந்தப் பெண்ணை இளவரசர் அரண்மனையில் கொண்டு போய் வைத்துக் கொள்ள நினைப்பது கேவலம், இழிவிலும் இழிவான காரியம். ஆகையால், இன்றையதினம் அவர் இங்கே வருவதற்கு அவருக்கு முகம் இருக்காது என்பது முற்றிலும் நிச்சயம். பூர்ணசந்திரோதயத்தை நான் ஆரம்பத்தில் பிரமாதமான மனிஷியாக மதித்திருந்தேன். அவள் நம்முடைய பாளையக்காரரிடத்திலும் இளவரசரிடத்திலும் நடந்து கொண்டதைக் கேட்டபிறகு அவள் கேவலம் கெட்டுப்போன மனிஷி என்ற எண்ணமே என் மனசில் உண்டாகிறது. ஆனால், எனக்கு ஒரு சந்தேகம் உண்டாகிறது. நம்முடைய பாளையக்காரர் இளவரசருக்கு அழைப்புக் கடிதம் அனுப்பி இருக்கிறாரா இல்லையா என்பது தெரிய வேண்டும்' என்றார். பாளையக்காரர், அதைப்பற்றிச் சந்தேகம் என்ன? யாராக இருந்தாலும் எனக்கென்னபயம்? மருங்காபுரி ஜெமீந்தாருடைய மாளிகையில் நாம் செய்துகொண்ட ஒப்பந்தப்படி, நாம் ஆறுபேரும் சேர்ந்துதானே இதை முடிவு செய்ய வேண்டும். இளவரசரை மாத்திரம் நான் அழைக்காமல் விலக்க என்ன நியாயமிருக்கிறது?’ என்றார். அந்தச் சமயத்தில் சாமண்ணாராவ் மருங்காபுரி ஜெமீந்தாரை உள்ளே அழைத்துக் கொண்டுவந்து சேர்க்க, அங்கே இருந்த மூவரும் எழுந்து கிழவருக்கு வந்தனம் செய்து அவரை வரவேற்றுத் தாங்களும் உட்கார, கிழவர் எல்லோருக்கும் பதில் வந்தனம் செய்தபின் பாளையக்காரரை, ஒரு பக்கமாக அழைத்துப்போய் நிற்க வைத்துக்கொண்டு, "என்ன பாளையக் காரரே இந்த விஷயம் ஏதாவது கலகத்தில் கொண்டு போய் விடுமோ என்ற ஒருவித பயம் என் மனசில் உண்டாகி சங்கடப் படுத்திக் கொண்டே இருக்கிறது" என்று தணிவான குரலில் கவலைக் கொண்டவராய்க் கூறினார். அதைக் கேட்டு ஒருவிதக் கலக்கமும் திகிலும் கொண்ட பாளையக்காரர், “ஏன் அப்படி சொல்லுகிறீர்கள்?' என்றார்.