பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/167

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் . 163 ஜெமீந்தார், 'காரணத்தை நான் இப்போது எப்படித் தெரிவிக்கிறது. இருக்கும் நிதானத்திலிருந்து நான் அப்படி நினைக்கிறேன். இளவரசரும் சாமண்ணாராவும் அந்தப் பெண்ணினிடத்தில் அதிக சம்பந்தம் பாராட்டுகிறதாகத் தெரிகிறது. அவள் உண்மையில் தார்வார் தேசத்து மகாராஜ னுடைய அபிமான புத்திரி என்று இப்போது நிச்சயமாகத் தெரிந்துபோய் விட்டதாம். அவள் சாமண்ணா ராவைத் தனது முக்கியக் காரியதரிசியாக அமர்த்திக் கொண்டு விட்டாளாம். இளவரசர் அவள் இருக்க, ஏழாவது உப்பரிகையில் இடம் கொடுக்கப் போகிறாராம். உப்பரிகையில் ஓரிடம் ஒழிக்கப் படுகிறதாம்; அங்கேயுள்ள வேலைக்காரர்கள் இந்த விவரங்களை எல்லாம் சொல்லுகிறார்களாம். விஷயம் இப்படி இருக்கிறது. அவள் பெரிய இடத்து மனுஷியாக இருப்பதால், நாம் பதற்றப்படாமல் எதையும் ஜாக்கிரதையாகச் செய்ய வேண்டும்; உங்களுடைய கட்சி உண்மையான கட்சியாக இருக்கலாம்; அவள் உங்களுக்கு இணங்கி வந்திருக்கலாம்; இருந்தாலும் இப்போதைய அவளுடைய நிலைமையைக் கருதி நாம் நம்முடைய உண்மையை வெளியிடுவது உசிதமல்ல வெனத் தோன்றுகிறது' என்றார். பாளையக்காரர், "அவள் யாராக இருந்தால் எனக்கென்ன? நான் சொல்லப்போவது உண்மையான விஷயம்; அதற்குத் தகுந்த சாட்சியும் இருக்கிறது. அவ்வளவுதானே நமக்குத் தேவை. மற்றது எப்படியாவது போகட்டும்; நமக்கென்ன?” என்று மறுமொழி கூறினார். அவ்வாறு மருங்காபுரி ஜெமீந்தாரும் பாளையக்காரரும் தனிமையில் பேசிக்கொண்டு போனதைக்கண்டகலியாணபுரம் மிட்டாதார் தமக்கு அருகிலிருந்த இனாம்தாரை மெதுவாக இடித்து, “அதோ பார்த்தீர்களா? நமக்குத் தெரியாமல்,கிழவர் பாளையக் காரரிடத்தில் ஏதோ பிரஸ்தாபம் செய்கிறார். கிழவருக்கு இதில் கொஞ்சம்கூட இஷ்டமிருக்காது. அதற்காக அவர் ஏதோ தந்திரம் செய்கிறார் என்றே நினைக்கிறேன்.