பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/169

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 165 இனாம்தார், 'ஆம் ஆம். அதே சங்கதிதான் சொன்னார்கள். அதுவும் அன்றி இந்தப் பாளையக்காரர் வம்புலாஞ் சோலையில் பூர்ணசந்திரோதயத்தைக் கண்டு பேசிய விவரத்தையும் பஞ்சண்ணாராவ் என்னிடம் தெரிவித்தான். இந்தப் பாளையக் காரர் பெருமைப்படுத்திக்கொண்டு சொல்லும் விவரத்துக்கும் அவன் சொன்ன விவரத்துக்கும் கொஞ்சம்கூட ஒற்றுமையே இல்லை' என்றார். மிட்டாதார், 'அந்த வரலாற்றைக்கூட அவர்கள் என்னிடம் வெளியிட்டார்கள். அதைக்கேட்டேன். பிறகு இந்த விருந்தைப் பற்றிய கடிதம் வந்தது. இந்த இரண்டு விதமான விருத்தாந்தங் களையும் அறிய என்மனம் நிரம்பவும் குழம்பிப் போய்விட்டது. அவர்கள் சொல்வது நிஜமா, அல்லது இவர் சொல்வது நிஜமா என்பதுதான் தெரியவில்லை' என்றார். இனாம்தார், 'நம்முடைய பாளையக்காரர். இவ்வளவு அபாண்டமான பொய்யைச்சொல்லி நம்மையெல்லாம் ஏமாற்ற நினைப் பாரா என்பதையும் நாம் யோசிக்க வேண்டும் அல்லவா?’ என்றார். மிட்டாதார், 'நம்முடைய பாளையக்காரர் ஒரு மாதிரியாக மனிதர்தான். சமயத்தில் இவர் எதை வேண்டுமானாலும் செய்யக் கூடியவர்தான். அதுவும் தவிர, இவருக்கு ஏராளமான கடன் ஏற்பட்டுவிட்டதாக ஜனங்கள் சொல்லிக் கொள்ளுகிறார்கள். இந்தப் பந்தயத்தை ஜெயிப்பவர்களுக்கு முப்பதினாயிரம் ரூபாய் கிடைக்கும் அல்லவா? அதை உத்தேசித்து இவர் ஒருவேளை இந்த மோசத்தில் இறங்கி இருக்கக் கூடும் அல்லவா? இருந்தாலும், நாம் இன்றையதினம் நிரம்பவும் விழிப்பாக இருக்க வேண்டும். பணம் மருங்காபுரிக் கிழவரிடத்தில் இருக்கிறது. பாளையக்காரர் ஜெயம் அடைந்து விட்டார் என்பதற்குத் தகுந்த ருஜு இருந்தாலன்றி, பணத்தைக் கொடுக்க நாம் இணங்கக் கூடாது. ஒரே இரவில் இந்தக் கிழவரிடத்துக்கும் இளவரசரிடத்துக்கும் தானாகவே போய்