பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/176

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172 பூர்ணசந்திரோதயம்-3 பூர்ணசந்திரோதயம், "நீ வேறு எதையும் செய்ய வேண்டாம்! மேலே அவர்கள் எல்லோரும் என்ன பேசுகிறார்கள் என்பதை நாங்கள் மூவரும் மறைந்திருந்து கேட்கவேண்டும். மேன்மாடப் படியின் உச்சியில் நாங்கள் வந்து நிற்கிறோம். அதற்கு அப்பால் இருக்கும் கதவை மாத்திரம் தாளிடாமல் நீ கொஞ்சம் திறந்து வைக்க வேண்டும். அவ்வளவுதான் இப்போது நீ செய்ய வேண்டியது' என்றாள். - அதைக் கேட்ட சாமண்ணாராவ் அப்படியே செய்வதாக ஒப்புக்கொண்டு அவர்கள் மூவரையும் வீட்டிற்குள் அழைத்துச் சென்றான். மேன்மாடப் படிகளுக்கு அப்பால் இருந்த கதவு மூடப்பட்டிருந்ததாக அவனுக்குத் தோன்றியது. ஆகையால், தான்.மேலே போவதற்கு ஆஸ்பதமாக ஐந்தாறு விசிறிகளைக் கையில் எடுத்துக்கொண்டு மேன்மாடப் படிகளில் ஏறி மேலே சென்று கதவை மெதுவாகத் திறந்து கொண்டுபோய் விசிறிகளை விருந்தினருக்கு எதிரில் வைத்துவிட்டுப்பின்வாங்கினான். அந்த வேலைக்காரனது வேலைப் பொறுப்பையும் பணிவையும் கண்ட பாளையக்காரர் நிரம்பவும் சந்தோஷம் அடைந்தவராய் அவனைப் புகழ்ந்து, 'சாமண்ணாராவ்! நல்ல வேளையில் விசிறிகளை எடுத்து வந்தாய். இருக்கட்டும்,நீ கீழே போய் இரு. மறுபடியும் நான் கூப்பிடும் போது வந்தால் போதும். அதற்குமுன் வரவேண்டாம்” என்று உத்தரவு பிறப்பித்தார். அப்படியே நடந்துகொள்வதாக சாமண்ணாராவ் அவருக்கு மறுமொழி கூறியபின் அவ்விடத்தைவிட்டு இப்பால் வந்தவன் கதவைச் சிறிதளவு திறந்தபடி வைத்துவிட்டுப் படிகளின் வழியாகக் கீழே இறங்கி வந்து பூர்ணசந்திரோதயத்துக்குச் சைகை காட்டினான். உடனே, பூர்ணசந்திரோதயம் மற்ற இருவரையும் அழைத்துக் கொண்டு சந்தடி செய்யாமல் மேன்மாடப் படிகளில் ஏறிக் கதவு இருந்த இடத்திற்குப்போய் மறைந்து நின்று கொண்டாள். பஞ்சண்ணாராவும், ராமனும் அவளுக்குப் பக்கத்தில் பதுங்கி ஒதுங்கிநின்று கொண்டிருந்தனர்.