பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/211

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 209 தள்ளாடிப் போய்விட்டதன்றி, இந்த உலகமே பாழ்த்துத் தோன்றியது. அந்த நிலைமையில் இந்த ஊர்ப் போலீஸ் தமிஷனர் என்மேல் சினங்கொண்டு என்னை இவ்விடத்தில் சிறை வைத்தார். நான் இவ்விடத்தைவிட்டு வெளியில்போக முயற்சித்து இந்த அறைக்கு வந்து பார்த்ததில், சில காலமாகக் காணாமல் போயிருந்த அந்த உத்தமபுருஷர் இவ்விடத்தில் இருக்கக் காண என் மனம் இன்னது என விவரிக்க முடியாவிதத்தில் தவித்து உருகிப்போய்விட்டது. அப்படிப் பட்ட நிலைமையில் அந்த மனோகர வடிவத்தை ஆசைதீரக் கட்டி ஆலிங்கனம் செய்யாமலும், அவருடைய பிரியமாகிய தேவாமிருதக் கடலில் ஆழ்ந்து மெய்மறந்து கிடக்காமலும் துர விலகி நிற்க யாரால் முடியும்? நீங்களே யோசித்துச் சரியான மறுமொழி சொல்லுங்கள்; இப்படிப்பட்ட இன்பவள்ளல் இந்தச் சிறையை விட்டுப்போனாலும், என்னைக் கைவிட்டுப் போக என் மனம் இடம் கொடுக்குமா?’ என்று கரை புரண்டோடிய காதற் பெருக்கோடு மொழிந்தாள். அவளது விபரீதமான வார்த்தைகளைக் கேட்டு முற்றிலும் பிரமித்துப் போன கலியாணசுந்தரம் அவளுக்கு என்ன மறுமொழி சொல்வது என்பதை அறியாதவனாய்ச்சிறிதுநேரம் தவித்தான். தான் எங்கே போனாலும், பரோபகாரச் சிந்தையினால் எவருக்கு உதவிசெய்தாலும், அவ்விடத்தில், உடனே காதல் சம்பந்தமான பிரஸ்தாபமே உண்டாவது விந்தையிலும் விந்தையாகத் தோன்றியது.தனது மனதிற்கு எந்த விஷயம் அருவருப்பானதோ அந்த விஷயமே எதிர்ப்பட்டுத் தன்னை நரகவேதனைக்கு ஆளாக்குவதைக் காண, அவன் தனது துர்பாக்கியத்தை நினைத்து நினைத்துத்துக்கித்தான். தான் எங்கு காலடி வைத்தாலும், அங்கு ஸ்திரீகளின் ஸாகஸமே மயமாகக் காணப்படுவதை உணர, அந்த நற்குண தீரன் இந்த உலகத்தில் அன்னிய மாதரையே நினையாத ஏகபத்தினி விரதம் உடைய மனிதன்மருந்துக்காவது ஒருவன் இருப்பானோ என்ற சந்தேகம்