பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/213

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே.துரைசாமி ஐயங்கார் 211 ஆபலையான பெண் ஆகையால், உன்னிடம் பலாத்காரமாக நடப்பதற்கு என்மனம் பின் வாங்குகிறது. ஆகையால், என்னை முதலில் விட்டுவிட்டு தூர நகர்ந்து நின்று மற்ற விஷயங்களைப் பேசு. அதற்குத் தக்க சமாதானம் நான் உனக்குச் சொல்லி உன் மனசைத் திருப்தி பண்ணி அனுப்பி வைக்கிறேன்: என்று அழுத்தமாகவும் உறுதியாகவும் கூறினான். அவனது சொற்களைக் கேட்ட அந்தப் பெண், 'நான் இத்தனை பாடுகள் பட்டு இந்தச் சிறைச்சாலையை விட்டு வெளிப்பட முயற்சித்ததன் கருத்து என்னவென்றால் நான் உடனே வெளியில்போய் என் மனசைக் கொள்ளைகொண்ட அந்த யெளவனப் புருஷரைக் கண்டு, அவரை அடைய வேண்டும் என்ற ஆவலினாலும், ஆசையினாலும் தூண்டப் பட்டே, நான் கட்டிலடங்கா ஆவேசம் கொண்டு இந்தச் சுவரைக்குடைந்து வழிசெய்துகொண்டு இங்கே வந்தேன். வந்த இடத்தில், நான் கும்பிடப்போன தெய்வம் குறுக்கிட்டதைக் காண, என் மனம் சகிக்கமுடியாதபடி குதுகலித்து என்னை ஆனந்த பரவசத்தில் ஆழ்த்திவிட்டது. ஆகவே, நான் உங்களைக் கட்டித் தழுவிப் பிடித்துக் கொண்டிருக்கிறேன். என்னுடைய ஆவல் பூர்த்தியாகத் தீராத முன், நான் உங்களை எப்படி விடமுடியும்? ஆகையால், நீங்கள் என்னைக் கொன்று போட்டுவிட்டால் கூட, அப்போதும், நான் உங்களை விடப்போகிறதில்லை. என் முழுப் பிரியத்தையும், உயிரையும் கொள்ளை கொண்ட கள்வராகிய நீங்கள் எனக்குத் தக்கவழி காட்டாமல், என்னை அசட்டை செய்தால், நான் சும்மா இருந்துவிட முடியுமா? நான் மற்ற எல்லா விஷயத்திலும் லலிதமான குணமுடைய மனிஷியானாலும், இந்த ஒரு விஷயத்தில் மாத்திரம் பிடிவாத குணமுடையவள். ஏனென்றால் நான் இதுவரையில் என் மனசை வெளியில் சபலிக்கவிடாமல், கட்டுப்பாடாகவும், உறுதியாகவும் இருந்து என் ஆசை முழுதையும் தேக்கி வைத்திருப்பவள். ஆதலால், அது முழுதும்