பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/233

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 23 + அதே நிமிஷத்தில், கீழே படுத்திருந்த இந்திராபாயி என்று பொய்ப் பெயர் வைத்திருந்த அபிராமி சடேரென்று எழுந்து, "ஐயையோ நீங்கள் எல்லோரும் இவ்வளவு நேரம் எங்கே போனtர்கள்? நான் எத்தனை தடவை கூச்சலிட்டு அழைத்தேன். இந்த மனிதன் சுவரைக் குடைந்துகொண்டு என்னுடைய அறைக்கு வந்து என்னைப் பலாத்காரம் செய்து அடித்துக் இழே தள்ளி என்னுடைய கற்பை அழித்துவிட்டானே! இதோ பாருங்கள்; என்னுடைய மண்டை உடைந்து இரத்தம் தொட்டுகிறது' என்று கூறி இரத்தமயமாக இருந்த தனது சேலையையும் தலையையும் காட்டிப் பிரமாதமாகக் கையைப் பிசைந்துகொண்டு பிரலாபித்து ஓங்கி அழத் தொடங்கினாள். அதைக் கேட்ட கலியாணசுந்தரம் வாய் திறந்து பேசமாட்டாமல் சித்திரப் பதுமைபோல அசைவற்று ஒய்ந்து நின்று விட்டான். அவ்வாறு தனது காதலன் கையும் களவுமாகப் பிடிபட்டதைக் கண்ட ஷண்முகவடிவு அப்படியே மூர்ச்சித்து வேரற்ற மரம்போலவும் உயிரற்ற பிணம்போலவும் தரையில் சாய்ந்து விட்டாள். 30-வது அதிகாரம் கபட நாடகம் திருவாரூருக்கு அருகிலுள்ள தனது மாளிகையிலிருந்த ஷண்முகவடிவு தூரதேசமான கோலாப்பூரில் கலியாணசுந்தரம் அடைபட்டிருந்த சிறைச்சாலைக்குள் இரவில், முற்றிலும் அகால வேளையில், அவனுக்கும் அபிராமிக்கும் சச்சரவு நடந்து கொண்டிருந்த முக்கியமானசமயத்தில் எப்படி வந்து சேர்ந்தாள் என்ற கேள்வி உண்டாவது இயற்கை. ஆதலால், அந்த விஷயத்தை நாம் கவனிப்போம்.