பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/255

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ഖപ്ലെ கே. துரைசாமி ஐயங்கார் 253 அந்த நிலைமையில் ஷண்முகவடிவை அழைத்துக்கொண்டு அந்த ஸ்திரீ போலீஸ் கமிஷனரினது ஜாகைக்குள் நுழைந்து, துரத்தில் நின்றபடி, அவ்விடத்தில் ஒர் அறைக்குள் நிரம்பவும் கம்பீரத் தோற்றத்தோடு உட்கார்ந்து கொண்டிருந்த போலீஸ் தமிஷனரை நோக்கி, "இதோ இந்தப் பெண்தான் ஷண்முக வடிவு. நேற்று ராத்திரி வந்தவர்கள் இவர்கள்தான். இந்தப்பெண் தங்கமான குணமுடைய உத்தம ஜாதிப் பெண்ணாக இருக்கிறாள். அந்த மனிதர் இவர்களிடத்தில் கூட தம்முடைய உண்மையான பெயரைச் சொல்லாமல் மறைத்துக் கடைசி வரையில் ஏமாற்றி இருக்கிறார். அவர் இந்த ஊரில் செய்த அக்கிரமங்களை எல்லாம், நான் விவரமாகச் சொன்னேன். நான் என்னதான் சொன்னாலும், உண்மை எளிதில் மனசில் படுமா? உங்களுடைய கீழ் அதிகாரியான இன்ஸ்பெக்டர்அவரைப் பற்றி எழுதி அனுப்பியுள்ள பிராதுகளையெல்லாம் படித்துக்காட்டி, இந்தப் பெண் என்னென்ன முயற்சிகள் செய்ய வேண்டும் என்பதையும் சொல்லுங்கள்' என்றாள். அதைக்கேட்ட போலீஸ் கமிஷனர்ஷண்முகவடிவை நோக்கி மரியாதையாகவும் அன்பாகவும் பேசத்தொடங்கி, 'அம்மா! நீ இப்போது கேள்வியுற்ற விஷயங்களெல்லாம் முழுதும் நிஜமானவை. அதைப்பற்றி நீ கொஞ்சமும் சந்தேகப்படத் தேவையில்லை. இந்தக்கலியாணசுந்தரம்தாதிப் பெண்களோடு கூட இந்த ஊருக்கு வந்தபிறகு அவரைப்பற்றிய சமாச்சாரங் களைப் பற்றிப் பலர் என்னிடம் வந்து புகார் சொல்லிக் கொண்டனர். நான் அதை அவ்வளவாகக் கவனிக்க வில்லை. ஆனால், அவருடைய நடத்தை வரவர நிரம்ப வும் கெட்டுப்போய்விடவே, என்னுடைய இன்ஸ்பெக்டர் அவருடைய நடத்தைகளையெல்லாம் கவனிக்கத் தொடங்கி னார். அந்தத் தாதிப் பெண்கள் இந்த ஊரைவிட்டுப் பூனா தேசத்துக்குப் போன பிறகு, அவர் இந்த ஊரிலுள்ள சில அயோக்கியர்களோடு சகவாசம் செய்துகொண்டு குல