பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/265

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 263 அவளைப்பார்க்க, அவள் அலுத்துப் போய் அலங்கோலமாகப் படுத்துக் கடுமையாகத்துயின்று கொண்டிருந்தாள். ஜுரவேகம் நன்றாகத் தெரிந்தது. அந்த அகாலவேளையில் அவளை எழுப்புவது சரியல்ல என்று நினைத்த ஷண்முகவடிவு, தான் மாத்திரம் வருவதாகச் சொல்லி விட்டு அவர்கள் இருந்த விடுதியின் கதவை மூடி வெளிப்பக்கத்தில் பூட்டிக்கொண்டு அந்த ஸ்திரீயோடு புறப்பட்டு வந்தாள். இருவரும் சத்திரத்தின் வாசலை அடைந்து, ரஸ்தாவில் நின்று கொண்டிருந்த பெரிய ஸாரட்டு வண்டியண்டைப் போய்ச் சேர்ந்தனர். போலீஸ் கமிஷனர் முன் பக்கத்தில் ஒர் ஆசனத்தில் உட்கார்ந்து கொண்டிருந்தனர். அவர் இவர்களைக் கண்டவுடன், “சீக்கிரம் ஏறுங்கள் நேரமாகிறது. அவசரம்' என்றார். உடனே ஸ்திரீகள் இருவரும் வண்டியில் ஏறிப் பின் பக்கத்தில் இருந்த ஆசனத்தில் உட்கார்ந்து கொண்டனர். வண்டி உடனே புறப்பட்டு விசையாகச் செல்லத் தொடங்கியது. சிறைச்சாலையில் எப்படிப்பட்ட விபரீத சம்பவம் நேர்ந்ததோ என்றும் அதைத் தான் நேரில் பார்த்தால், அதிலிருந்துதன்மனதில் எப்படிப்பட்ட சங்கடம் ஏற்படுமோ என்றும் ஷண்முகவடிவு நினைத்து அல்லல்பட்டவளாயிருக்க, அவளது பக்கத்தில் உட்கார்ந்திருந்த ஸ்திரீபோலீஸ் கமிஷனரைப் பார்த்து, 'அங்கே என்ன நடந்தது என்ற விவரத்தை இன்னம் கொஞ்சம் விவரமாகச் சொல்லுங்கள். அதைக் கேட்க வேண்டும் என்று எனக்கும் இந்தப் பெண்ணுக்கும் ஆவல் அதிகமாக இருக்கிறது" என்றாள். உடனே போலீஸ் கமிஷனர், "இதோ சிறைச்சாலை வந்துவிட்டது. இன்னம் ஐந்து நிமிஷத்தில் எல்லா விஷயத்தையும் நீங்களே நேரில் பார்க்கப் போகிறீர்கள். நான் இப்போது சொன்னால், அதை நீங்கள் நம்பவே மாட்டீர்கள். எதையும் அவரவர்கள் கண்ணால் பார்த்தால்தான் திருப்தி உண்டாகும். ஆனால், ஒரு சங்கதியை மாத்திரம் நான் உங்களுக்குத் தெரிவித்து வைக்கிறேன். ஆனால், அது இந்தக்