பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/279

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 277 விடியற்காலையில், ஒரு பெரிய பெட்டிவண்டி சத்திரத்தின் வாசலில் வந்து நின்றது. அதற்குள் இருந்த போலீஸ் கமிஷனரது விருந்தாளி ஸ் திரீ உடனே கீழே இறங்கி உள்ளே போய் ப் பிரயாணம் புறப்படும் படி அழைக்க, ஷண்முகவடிவும் வேலைக்காரியும் தங்களது மூட்டைகளோடு வந்து வண்டியில் ஏறிக்கொண்டனர். வண்டியின் உட்புறம் நிரம் பவும் விசாலமானதாகவும் பல தினங்களுக்குத் தேவையான ஆகாரம் சிற்றுண்டிகள் முதலிய வஸ்துக்களும் வசதிகளும் ஏராளமாக நிறைந்ததாகவும் இருந்தது. வண்டிக்குள் மூவரும் உட்கார்ந்து கொள்ள அது உடனே பிரயாணம் புறப்பட்டது. அவர்கள் கோலாப்பூரிலிருந்து புறப்பட்டுப் பிரயாணம் செய்து தஞ்சைக்கு வரும்வரையில் எவ்வித விசேஷ சம்பவமும் நேரவில்லை. ஆதலால், அவர்களினது வழிநடையைக் குறித்த விவரங்களை எல்லாம் விஸ்தரித்துச்சொல்வது இந்தக்கதைக்கு அவசியமில்லை. ஆதலால், அதை விடுத்து மேல் நடந்த விருத்தாந்தங்களைக் கவனிப்போம். சில தினங்களுக்குப் பிறகு அவர்கள் மூவரும் தஞ்சையிலிருந்த அந்த விருந்தாளி ஸ்திரீயினது வாசஸ்தலத்தை அடைந்து உள்ளே சென்றனர். அந்த ஸ்திரீ ஷண்முக வடிவினிடத்தில் முன்னரே சொன்னதற்கு இணங்க அந்த இடம் பெருத்த சீமானது மாளிகை போலச் செல்வமும் சீரும் சிறப்பும் சிங்காரங்களும் நிறைந்ததாகவே இருக்கவே, அதைக்கண்ட இளநங்கை, தன்னை அழைத்து வந்த ஸ்திரீ ஒரு பெரிய சீமாட்டியென்று நிச்சயித்துக்கொண்டு அவளிடத்தில் முன்னிலும் ஆயிரமடங்கு அதிகரித்த மதிப்பும் மரியாதையும் வைத்தவள்.ஆனாள். அப்போது அவளது கவனம் முழுதும் நெடுங்காலமாகப் பிரிந்த தனது அக்காளைக் காண வேண்டும் என்ற விஷயத்திலேயே சென்று லயித்திருந்தது ஆகையால், கலியாணசுந்தரத்தைப் பற்றிய நினைவும், கோலாப்பூரில் நிகழ்ந்த பரம சங்கடங்களைப் பற்றிய நினைவும் சிறிது மறைந்திருந்தது. தனது அக்காளை எப்போது