பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/281

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 279 எல்லாம் அக்காளின் மீது திருப்பவும், தனது முகத்தில் சந்தோஷக்குறியை வருவித்துக் கொள்ளவும் முயன்றதெல்லாம் அவமானமாக முடிந்தது. அவளது முகம் விகாரப்பட்டே தோன்றியதன்றி அகத்தின் சஞ்சலத்தைக் கண்ணாடிபோல வெளியில் காட்டியவண்ணம் இருந்தது. அந்த நிலைமையில் தான் தனது அக்காளைக் கண்டு நிகழ்ந்த விஷயங்களை எல்லாம் அவளிடம் வெளியிட்டால் அவள் தனக்கு உத்கிருஷ்டமான புத்திமதி சொல்லி தான் அதற்குமேல் நடந்து கொள்ளத் தக்க நல்ல யோசனை ஏதேனும் சொல்லுவாள் என்ற நினைவு உண்டாயிற்று. அதுவுமன்றி, தான்.தனது அக்காளையும் எப்படியாவது ஊருக்கு அழைத்துக் கொண்டுபோக வேண்டும் என்ற ஆசையும் மும்முரமாகத் தூண்டிக் கொண்டிருந்தது. ஆகவே, அவள் தஞ்சையை அடைந்தபின், அந்த விருந்தாளி ஸ்திரீயின் வேண்டுகோளையும் அவளது பணிமக்களினது அன்பார்ந்த உபசரணைகளையும் மறுக்கமாட்டாதவளாப் ஸ்நானம் போஜனம் முதலியவற்றை ஒருவாறு முடித்துக் கொண்டாள்; அவளோடு கூடவந்த வேலைக்காரி கோலாப்பூரி லிருந்து புறப்பட்ட காலத்திலும் தேக அசெளக்கியத்தோடேயே வந்தவள். ஆகையால், மறுபடியும் பிரயாணம் செய்த அலுப்பினால், பழைய கேவல நிலைமையை அடைந்து படுத்துவிட்டாள். அந்த மாளிகையில் இருந்த பணி மக்கள் திறமை வாய்ந்த ஒரு வைத்தியரை அழைத்து வந்து அவளுக்குத் தேவையான மருந்துகள் கொடுக்கச் செய்தனர். வைத்தியர் அவளுக்குத்தக்க ஒளஷதம் கொடுத்ததன்றி அவள் ஐந்தாறு தினங்கள் வரையில் உடம்புக்கு ஒய்வு கொடுத்து படுத்தபடியே இருந்தால், அவள் பழைய நிலைமையை அடைந்துவிடுவாள் என்று சொல்லிவிட்டுப் போனார். ஆகவே, அந்த ஐந்தாறு தினங்கள் வரையில் ஷண்முகவடிவும் தஞ்சையிலேயே இருக்கவேண்டும் என்று அந்த விருந்தாளி ஸ்திரி கேட்டுக் கொள்ள, ஷண்முகவடிவு அதை ஒப்புக் கொள்ளாமல், "அம்மா